குழந்தைகள் அனைவருக்கும் பிடிக்கும். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள்.
’குழல் இனிது; யாழ் இனிது’ என்ப-தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.
என்கிறார் வள்ளுவர் பெருந்தகை. அதாவது இசை என்பது நோயைக்கூட விரட்டும் சக்தி படைத்தது, இனிமையானது. அதைக் காட்டிலும் இனிமையானது குழந்தை பேசும் மழைலை வார்த்தைகள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
மழலை மொழியில் மயங்காதார் யாருமே இருக்க முடியாது. அத்தகைய மழைலைச் செல்வங்களை நோயிலிருந்து காத்து, பேணி வளர்ப்பது பெற்றோர்களின் கடமை.
நம் நாட்டில் பல்வேறு நோய்களால் பாதிகப்பட்டு ஒன்று முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள் இறந்து போகின்றனர். குறிப்பாக வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 1.60 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர் என்று புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு ஆண்டுக்கு வயற்றுப் போக்கால் இத்தனை குழந்தைகள் இறந்துவிடுகின்றனரா? என்பது நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எனினும் வயிற்றுப் போக்கைத் தடுக்க 1985ம் ஆண்டு முதல் ஆய்வுகள் நடந்து வந்துகொண்டிருந்ததன் பலனாக தற்போது வயற்றுப் போக்குக்கான தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
"ரோட்டோ வைரஸ்" என்ற இத்தடுப்பூசி மிக குறைந்த விலையில் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் செய்யப்பட்டிருக்கிறது. இனி வயிற்றுப்போக்கால் குழந்தைகள் இறப்பது இரண்டாண்டுகளில் வெகுவாக குறைந்து, வயிற்றுப் போக்கால் குழந்தைகள் இறப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும் என உறுதியாக நம்பலாம்.
ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கை தடுக்கும் தடுப்பூசியின் சிறப்பம்சங்கள்:
(features of the rotavirus vaccine )
- முழுக்க முழுக்க, இந்திய மருத்துவர்களும், மருத்துவ விஞ்ஞானிகளும், தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து, இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
- பயோ டெக்னாலஜி துறையும், ஐதராபாத்தைச் சேர்ந்த, பாரத் பயோ டெக்-(Bharat Bio Tech) என்ற நிறுவனமும் இணைந்து, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன.
- வேலூர் மருத்துவமனை, புனே மருத்துவமனை மற்றும் டில்லி மருத்துவமனை என, மூன்று இடங்களில், இந்தத் தடுப்பூசிகளின் பரிசோதனை நடைபெற்றது.
- பரிசோதனையின் போது, சர்வதேச நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. மிக, மிக எச்சரிக்கையாக நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி கிடைத்துள்ளது.
- அடுத்த, எட்டு மாதங்களுக்குள், "ரோட்டா வைரஸ்' தடுப்பூசி (Rotavirus vaccine) சந்தைக்கு வந்து விடும். குழந்தை பிறந்ததில் இருந்து, 6வது வாரம், 10 வது வாரம் மற்றும், 14வது வாரம் என, மூன்று முறை, இந்த ரோட்டா வைரஸ் தடுப்பூசியை, குழந்தைகளுக்கு போட வேண்டும்.
- மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையின், அனுமதி கிடைத்ததும், ஏழை மக்களும் பயன்படுத்தும் வகையில், 150 ரூபாய்க்கு, இந்த தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
- இந்த தடுப்பூசி மருத்துவ உலகில், மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில், சந்தேகம் இல்லை. நம்நாட்டில் மட்டுமின்றி, ஏழை நாடுகளும், இந்த தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள முன்வரும்.
பலருக்கும் பயன்படும் என்பதால் இச்செய்தியை பகிர்ந்திருக்கிறேன். செய்தியைத் தந்த தினமலருக்கு நன்றி.