--> Skip to main content

மதர்போர்டு என்றால் என்ன?

what is motherboard or main board? 

கணிப்பொறிக்கு உள்ளே இருக்கும் மின் இணைப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனி சர்க்யூட் கார்டுகளாக நீண்ட சதுர பச்சைக் கார்டுகளாக இருக்கும். இவறுக்கு இடையே கனெக்ஷன் கொடுக்க முன்பெல்லாம் ஒயர்களின் மூலம் செய்து கொண்டிருந்தார்கள்.

motherboard and their parts

இப்போது இந்த இணைப்புகளையும் பிசிபி PCB என்று சொல்லப்படும் இணைப்பு அச்சிட்ட போர்டில் தயாரித்து அதில் கனெக்டர்களை சால்டர் செய்தி மற்ற கார்டுகளைச் செருகிறார்கள். இந்த அடித்தள கார்டுக்கு (computer basic card) மதபோர்டு என்று பெயர். இந்த மதர் போர்டு (mother) முறையில் அதிக வசதிகளைப் பெற முடியும்.

கணினிப்பொறியின் வசதிகளை  விரிவுபடுத்த(To extend the facilities of a computer) ஸ்லாட் என்று சொல்லப்படும் வெற்றிடங்கள் (Slot Vacuums) இருக்கும். அதில் நமக்கு விரிவாக்கத்துக்குத் தேவைப்பட்ட கார்டுகளை வாங்கிச் செருகிக் கொள்ளலாம். 

உதாரணமாக உங்களுக்குப் புதிதாக ஒரு பிரிண்ட்டரை வாங்கி இணைக்க வேண்டும் என்றாலோ அல்லது RAM போன்ற நினைவறைகளை விரிவாக்க வேண்டும் என்றாலோ மதர் போர்டில் காலியிடம் (Slot) இருக்கும். அதில் தேவைபடும் கார்டுகளை சொருகிக்கொண்டு மேலதிக வசிதிகளைப் பெற்று விரிவாக்கம் செய்துகொள்ள முடியும். (மேலுள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு சரியான புரிதல் ஏற்படும்.)

நன்றி
- தங்கம்பழனி
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar