கடவுள் கொடுப்பதிருப்பது
கடலில் கரைப்பதற்கா?
இல்லாமை இல்லாமல்
செய்ய வேண்டும்
இல்லாதவர்கள்
இல்லாமல் போகலாமா?
உணவில்லாமல்
ஊண் கரைந்து
எழும்புடனே
இறக்கிறது ஒரு கூட்டம்..
உலகத்து கனிகளெல்லாம்
ஒன்றிணைத்து
"கேக்" செய்து
வெள்ளியில் விநாயகர்
வீதியில் ஊர்வலம்.
நடுகடலில் மூழ்கடிக்கும்
நன்மக்கள் நம்நாடே...
பொருள் ஒருபக்கம் சேர..
அருள் ஒருபக்கம் கூட...
"மனிதம்" மட்டும்
மரணத்தின் பிடியில்..
என்ன வேடிக்கை இது..?
நெஞ்சம் குமறுகிறது.
நிலையில்லாமல் தவிக்கிறது...
என் செய்வேன்..?
- தங்கம்பழனி
9 லட்சம் செலவில் விநாயகர் சிலை செய்து அதற்கு ஆராதனை செய்து இருவாரங்களில் ஏகோபித்த பக்தி பரவச குரலெழுப்பி, நகர் வலம் வந்து நடுக்கடலில் கரைத்தார்களாம்.. இது செய்தி.
செய்தியைப் படித்துவிட்டு, அந்த செயலுக்கு எதிர் செய்தி எழுலாம்னு நினைச்சப்போ எழுதினதுதான் மேல இருக்கிறது.. கண்டிப்பா இது கவிதை இல்லை..
அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக்கொண்டிருக்கும் எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள்... எத்தனையோபேர் இன்றும் உண்ண உணவின்றி, வாழ வழியின்றி இருக்கிறார்கள்..எத்தனையோ பேர் மனநலம் பாதிக்கப்பட்டு , தெருதெருவாக புழுதிபூசி.. அழக்கடைந்த சாக்கடையாய் திரிகிறார்கள்...
எத்தனையோ கைவிடப்பட்டவர்கள் இருக்கிறார்கள்..அனாதை குழந்தைகள் இருக்கிறார்கள்...பக்தி என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து, பால், பழங்களை ஆராதனை என்ற பெயரிலே கீழே கொட்டி நாசம் செய்கிறார்கள்...
நானும் ஒரு கடவுள் பக்தி உடையவன்தான்..எல்லோருக்கும் கடவுள் பக்தி இருக்கும்.. ஒருநாளும் கடவுள் இப்படி பொருட்களை வீண்டிக்கச் சொன்னதில்லை.. அந்த வெள்ளி விநாயகனே வேதனை பட்டிருப்பான்... எளிமையாக கொண்டாடலாம்.. ஏழை எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு உதவி, அவர்கள் மகிழ்ச்சியில் அண்ணா சொன்ன மாதிரி இறைவனைப் பார்க்கலாமே...!!!
(சத்தியமா நாத்திகவாதி இல்லீங்க..!)