வணக்கம் நண்பர்களே...!
நீங்கள் மட்டுமே பதிவெழுதிக்கொண்டிருக்கும் உங்களுடைய வலைப்பூவில் , உங்களுடைய நண்பர்களையும் பதிவெழுத அழைக்கலாம். அவர்களின் திறமையும், அனுபவங்களையும் உங்கள் வலைத்தளத்தில் இடம்பெறச் செய்ய முடியும்.
அதற்கு நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் உள்ள அமைப்பைப் (Settings) பயன்படுத்தி, நண்பர்களை உங்கள் வலைத்தளத்தின் ஆசிரியராக (Author) சேர்க்க வேண்டும்.
வலைப்பதிவில் நண்பரை ஆசிரியராக சேர்ப்பது எப்படி?
- உங்கள் பிளாக்கர் தளத்தில் லாகின் செய்துகொள்ளுங்கள்.
- Settings==>Basic என்ற அமைப்பில் செல்லுங்கள்.
- அங்கு Permissions என்ற தலைப்பில் Blog Authors என்ற தலைப்பின் கீழ் Add Authors என்ற வசதி இருக்கும்.
- Add Authors என்பதைச்சொடுக்கி கீழ்விரியும் பெட்டியில் உங்களுடைய நண்பரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
- பிறகு கீழுள்ள "Invite Authors" என்பதை அழுத்துவதன் மூலம் உங்களுடைய அழைப்புச் சுட்டி அடங்கிய மின்னஞ்சல் செய்தி நண்பரின் மின்னஞ்சலுக்குச் சென்றுவிடும்.
- உங்களுடைய நண்பர் அந்த மின்னஞ்சலைத் திறந்து அதிலுள்ள அழைப்புச் சுட்டியைச் சொடுக்கு உறுதிப்படுத்துவதன் மூலம் உங்களுடைய வலைப்பூவிற்கு அவரும் ஒரு ஆசிரியராக இணைக்கப்பட்டுவிடுவார்.
இனி அவருடைய பிளாக்கர் கணக்கில் உங்களுடைய வலைப்பதிவும் இணைக்கப்பட்டுவிடும். பிறகு அவருடைய பிளாக்கர் (Blogger Account) கணக்கிலிருந்தவாறே உங்களுடைய தளத்தில் பதிவுகள் பதிவுகளை எழுதி வெளியிட முடியும். ஆனால் நிர்வகிக்க முடியாது. நீங்கள் விரும்பும்வரை அவரை ஆசிரியராக உங்கள் தளத்திற்கு தொடர்ந்து அனுமதிக்கலாம். தேவையில்லையெனில் மீண்டும் நீக்கிவிடலாம்.
நம்முடைய "blog in tamil" வலைச்சரம் வலைப்பூவிலும் இதே முறையைப் பின்பற்றித்தான் பதிவர்கள் நண்பர்கள் ஆசிரியராக சேர்க்கப்படுகிறார்கள். அவ்வாறு பொறுப்பேற்கும் பதிவர்கள் (ஆசிரியர்கள்) ஒருவார காலம் ஆசிரியர் பொறுப்பேற்று தங்களுக்குப் பிடித்த பதிவர்களையும், வலைப்பதிவையும், இடுகைகளையும் அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.
இப்பதிவு புதிய வலைப்பதிவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
கீழுள்ள வீடியோவில் நண்பர்கள் சக வலைப்பதிவர்களை ஆசிரியராக வலைத்தளத்தில் இணைப்பது எப்படி என்பதை காட்டியிருக்கிறேன். பாருங்கள். நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.