ஜிமெயிலில் படங்களை அனுப்பவதெனில் இதுநாள்வரைக்கும் மெயிலுடன் படங்களைத் தனிக் கோப்பாகத்தான் இணைத்து (Attach) அனுப்பியிருப்பீர்கள்.
நன்றி.
தற்போதுள்ள புதிய வசதி மூலம் மின்னஞ்சல் செய்தியினூடாக படங்களை ஒட்டி அனுப்பமுடியும்.
ஜிமெயில் செய்தியினிடையே வேர்ட் டாக்குமெண்டில் (MS-Word document) படங்களை சேர்ப்பது போல சேர்த்து அனுப்ப ஒரு சிறிய செட்டிங்சை மேற்கொள்ள வேண்டும்.
1. உங்கள் ஜிமெயில் அக்கவுண்டை திறந்துகொள்ளுங்கள்.
2. செட்டிங்ஸ் கியப் பாக்சை கிளிக் செய்யுங்கள்.
3. செட்டிங்ஸ் கிளிக் செய்துவிடுங்கள்.
4. தோன்றும் விண்டோவில் LABS கிளிக் செய்யுங்கள்.
5. ஸ்கோரல் செய்யுங்கள்.
6. மூன்றாவதாக உள்ள Inserting Images என்பதில் Enable செய்யுங்கள்
7. பக்கத்தின் இறுதியில் உள்ள Save Changes கிளிக் செய்யுங்கள்.
முடிந்தது.
இனி நீங்கள் உங்களுடைய மின்னஞ்சல் செய்திலேயே படங்களை இணைக்க முடியும்.
மின்னஞ்சல் செய்தியில் படங்களை இணைக்க:
- வழக்கம்போல கம்போஸ் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- மின்னஞ்சல் முகவரியை கொடுத்து, செய்தி அனுப்ப வேண்டிய பெட்டியில் செய்தியை தட்டச்சிடுங்கள்.
- செய்திக்கு அல்லது தகவல்களுக்கு இடையில் படத்தை இணைக்க வேண்டுமெனில் கீழுள்ள + குறியில் கர்சரை வைத்து விரியும் ஆப்சனில் இன்சர்ட் போட்டோஸ் (Insert Photos) ஆப்சனைப் பயன்படுத்தி படத்தை செய்தியிலேயே இணைத்துவிடலாம்.
கணினியில் உள்ள படத்தை மட்டுமல்ல.. இணையத்திலுள்ள படத்தையும் இவ்வாறு இணைக்கலாம்.
இணைக்கப்பட்ட படத்தை ரீசைஸ் செய்வதற்கும் வசதியுண்டு. மின்னஞ்சல் செய்திக்கிடையில் ஒட்டிய படத்தின் மீது கிளிக்செய்ய அதற்கான ஆப்சன் தோன்றும். அதில் மூன்று ஆப்சன்கள் தோன்றும் (Small, Medium, Large) அவற்றை கிளிக் செய்து படங்களை ரீசைஸ் செய்து கொள்ள முடியும்.
மேலும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை காணுங்கள்.
நன்றி.
- தங்கம்பழனி