--> Skip to main content

software to take Screenshot எடுக்க ஒரு சூப்பர் மென்பொருள்... (இந்த மென்பொருள் தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.)






இப்பொழுது கம்ப்யூட்டர் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது என்பது மிக எளிதாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. 
ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக, கம்ப்யூட்டர் திரையில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பதற்கு அந்த வசதிகள் பெரிதாக கொடுக்கப்படவில்லை.

அப்பொழுது, பணிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட மென்பொருட்களை பற்றிய பதிவுதான் இது.

என்றும் கூட இதுபோன்ற ஏற்பாட்டில் சாஃப்ட்வேர் என்று சொல்லப்படுகின்ற மூன்றாம் நபர்கள் உருவாக்கின மென்பொருட்கள் மிக எளிதாகவும், பயன்படுத்திட சிரமமும் இன்றி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

அப்படிப்பட்ட ஒரு மென்பொருள் தான் டிராபிக் கேப்டன் என்ற மென்பொருள். 
இது தற்பொழுது செயல்பட்டில் உள்ளதா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை.

எனினும் இது பற்றிய தகவல்கள் தற்போது படிக்கும் பொழுது தொழில்நுட்ப பதிவராக மிகவும் மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது.

இனி பதிவை படித்து பாருங்கள்..!

இப்ப பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மென்பொருள் ஆனது தற்பொழுது பயன்பாட்டிற்கு கிடைக்கவில்லை. அதனால் இந்த மென்பொருளுக்கான சுட்டியை நீக்கி உள்ளோம். நன்றி.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினியிலிருந்து ஒரு சில தேவைகளுக்காக அப்படியே திரையில் உள்ளதை படமாக எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். உதாரணமாக, ஒரு விளக்க குறிப்பு கொடுக்க வேண்டுமெனில் கணினியில் உள்ளதை அப்படியே படம்பிடித்து, அவற்றை அம்புகுறியிட்டு விளக்க முடியும். 

இணையத்தில் உள்ள இணையப் பக்கங்களை ஒரு படமாக சேமிக்கவும் இந்த Screen Shot முறை பயன்படும். தரவிறக்கம் செய்ய முடியாத படங்களை இந்த ஸ்கீரீன் ஷாட் முறையில் காப்பி செய்து பிறகு, போட்டோ எடிட்டர் போன்ற மென்பொருள்களின் மூலம் தேவையான முறையில் மாற்றம் செய்துகொள்ள முடியும். 

சாதாரணமாக கணினிகளில் Screenshot எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். 

 கணினி விசைப்பலகையில்  Print Screen அழுத்தி, திரையை காப்பி செய்துகொண்டு, Paint, Photoshop, Photo Editing Software போன்ற ஏதாவது ஒன்றில் புதிய கோப்பைத் திறந்து அதில் அப்படத்தை பேஸ்ட் செய்து பிறகு வேண்டிய மாற்றங்களைச் செய்து தேவையான பார்மட்டில் படமாக சேமிக்கலாம்.  

இவ்வாறு செய்வதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஒவ்வொரு முறையும் இவ்வாறு செய்துகொண்டிருப்பது ஒரு வித சலிப்பை ஏற்படுத்திவிடும். வீணாகும் நேரத்தை தவிர்க்க, உடனடியாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து படங்களாக சேமிக்க  பயன்படும் மென்பொருள் ரேப்பிகேப்வின் - RapiCapWin. 

RapiCapWin மென்பொருளின் சிறப்புகள்: 

  • இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. கணினியில் நிறுவி பயன்படுத்தும் முறையிலும், போர்ட்டபிள் வெர்சனாகவும் கிடைக்கிறது. 
  • இம்மென்பொருள் மூலம் கணினிதிரையை முழுவதுமாக படம் பிடிக்கலாம். (full screenshot)
  • கணினித்திரையிலுள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் படம் பிடிக்கலாம். (Specific area screenshot)
  • காட்சிக்குத் தெரியும் கணினித் திரையை (Active Window Screenshot) படம்பிடிக்கலாம். 
  • எடுக்கப்பட்ட ஸ்கீரான்சாட்டை தொடர்புடைய மென்பொருளில் திறந்துகொள்ளும் வசதி,
  • படம் தேவையில்லை எனில் உடனடியாக டெலீட் செய்யும் வசதி
  • ஆன்லைனில் பகிர்ந்துகொள்ள வசதி
  • இமெயில் அனுப்பும் வசதி

636kb அளவுகொண்ட இச்சிறிய மென்பொருள் முற்றிலும் இலவசமானது மட்டுமின்றி பாதுகாப்பானதும் கூட. 

மென்பொருளைத் தரவிறக்கம் செய்யவும், மென்பொருளைப் பற்றிய மேலதிக தகவல்கள், வசதிகளைத் தெரிந்துகொள்ளவும் நீங்கள் சொடுக்க வேண்டிய சுட்டி: Download RapicapWin Screeshot software

Hi friends,
This post explained about the screenshot software named RapiCapWin.  This is free software to take screenshots. It is free software; it presents three classical modes of capture.
1. Full Screenshot
2. The active window
3. A rectangular area
Software File size is 636 KB. Version 1.0.9, Free License, No spyware, No ad-ware
Thanks.

நன்றி.

- தங்கம்பழனி 

Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar