--> Skip to main content

ஃப்யர்பாக்ஸ் அட்ரஸ்பாரை கூகிள் சர்ச் பாக்சாக மாற்றும் வழிமுறைகள் (வீடியோ)

வணக்கம் நண்பர்களே.! இந்த வீடியோவானது ஃபையர்பாக்ஸ் அட்ரஸ்பாரை கூகிள் தேடல்பெட்டியாக பயன்படுத்துவது எப்படி என்பதை விளக்குகிறது. வீடியோவை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.


பெரும்பாலானோர்கள் பையர்பாக்ஸ் உலவியைப் பயன்படுத்திக்கொண்டிருப்போம்.. நமக்குத் தேவையான தகவல்களை தேடிப்பெற அடிக்கடி கூகிள் தேடல் தளம் (Google Search) சென்று தேடிப்பெறுவோம்.. அவ்வாறு கூளிள் தேடல் தளம் செல்லாமலேயே பயர்பாக்ஸ் அட்ரஸ் பாரில் தட்டச்சு செய்து என்டர் தட்டுவதன் மூலம் கூகிள் தேடல் முடிவுகளைப் பெறலாம்..

உங்களுடைய பையர்பாக்ஸ் அட்ரஸ்பாரை கூகிள் தேடல் பெட்டியாக மாற்றுவது எப்படி என்பதை இந்த வீடியோவில் காண்பித்திருக்கிறேன். ஒரு முறை இந்த செட்டிங்சை நீங்கள் செய்துகொண்டால் போதுமானது.

நீங்கள் எப்பொழுதெல்லாம் உங்களுடைய பையர்பாக்ஸ் உலவியைப் பயன்படுத்துகிறீர்களோ அப்பொழுதெல்லாம் அதனுடைய அட்ரஸ்பாரையே கூகிள் தேடலாகவும் பயன்படுத்தலாம்.. அனைவருக்கும் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.  

நன்றி!

- தங்கம்பழனி
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar