உயிர்கொல்லி நோயான எய்ட்க்கு புதிய HIV எதிர்ப்பு மருந்தை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. வைரசை (HIV Virus) அழிப்பதில் புதிய மருந்துவகளை கண்டிப்பிடிப்பதில் மருத்துவர்களும், ஆய்வாளர்களும் இறங்கியுள்ளனர். இதுவரைக்கும் சரியான அழிப்பு மருந்து பொருளை கண்டிபிடிக்கவில்லை.
என்றாலும் தற்பொழுது மின்னிசோட்டா பல்கலைக்கழக மருந்துப்பொருள் தயாரிப்புத் துறை ஆய்வாளர்கள் எச்.ஐ.வி வைரசை முழுவதும் அழிக்கும் மருந்துப்பொருளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருகின்றனர்.
இந்த ஆராய்ச்சியின் பயனாக புற்று நோயை கட்டுப்படுத்தக்கூடிய டெசிடேபைன், கெம்சிடேபைன் என்ற இரண்டு திரவ மருந்துப்பொருட்களைப் பயன்படுத்தி புதிய வைரஸ் எதிர்ப்பு மருந்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர.
இது ஊசிமூலம் செலுத்தக்கூடிய மருந்தாகும். இதனால் நோயாளிகளுக்கு பெரும் நேரவிரயமும், பொருட்செலவும் ஏற்படுகிறது. இதையே இருதிரவ மருந்துப்பொருட்களையும் ஒன்றாக்கி மாத்திரை வடிவில் மாற்றிகொடுப்பதன் மூலம் நேரவிரயம் குறைக்கப்படுவதோடு, நோயாளிகளும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்வதும் தடுக்கபடும்.
முதல்கட்ட சோதனைக்குப் பிறகு எய்ட்ஸ் நோயை குணப்படும் இந்த மாத்திரைகள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கபடும் என்ற அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
(aids, hiv, hiv medicine, hiv remedy, medical news, remedy, drugs for aids)
(aids, hiv, hiv medicine, hiv remedy, medical news, remedy, drugs for aids)