(இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கான பயனுள்ள குறிப்புகள்)
மனித மனம் எப்பொழுதும் "பணம் பணம்" என்ற மாயாஜால வார்த்தைக்கு கட்டுப்பட்டே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது பேருண்மை.
இந்த உலகத்தில் பொருளைத் தேடாதவர்கள் எவருமே இருக்க முடியாது. காரணம் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலிருந்து ஆடம்பரத் தேவைகள் வரைக்கும் அனைத்திற்கும் காரணகர்த்தாக இருந்து பயன்பட்டு வருபவை பொருளும் பணமும்தான்.
பொருள் தேவையெனில் கண்டிப்பாக பணம் நம் கையில் இருந்தே ஆகவேண்டும். பண்ட மாற்று முறை மாறி, அவற்றிற்கு பதிலீடாக பணத்தை வெளியிட்ட நாள் முதல் மனிதன் பணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது.
அதனால்தான் மனிதன் திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதை மாற்றி திரைகடல் ஓடியும் டாலர்(Dollar) தேடு, திரைகடல் ஓடியும் யூரோ (Euro) தேடு... இப்படி தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டுவிட்டான்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணத்தை திரைகடல் ஓடிதான் தேட வேண்டுமா என்ன? இந்த கணினி உலகத்தில், உட்கார்ந்த இடத்திலிருந்தே கடல் கடந்து பொருள் தேடலாம். அவ்வாறு பொருள் தேடும் வித்தைகள் பல உள்ளன. அவற்றிற்குத் தேவை அடிப்படை கணினி அறிவு, இணைய இணைப்பு இருந்தாலே போதும். உங்களால் நிச்சயம் பணம் சம்பாதிக்க முடியும்.
அதற்கு வழிகாட்டுவதுதான் இப்பதிவும். இணையத்தில் இந்த இரண்டு சாதனங்களை வைத்துக்கொண்டு அன்றாடம் 10 டாலர் முதல் திறமைக்கேற்றவாறு 100 டாலர் வரைக்கும் மிக எளிதாக சம்பாதிப்பவர்கள் ஏராளமானோர் இருக்கச் செய்கின்றனர். அவர்களில் நீங்களும் ஒருவராக ஏன் இருக்க முடியாது?
இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆயிரக்கணக்கான வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் PTC தளங்கள்.
- PTC தளங்களில் நம்பகமானவை எவை?
- ஏமாற்றுத் தளங்கள் எவை? அவற்றை எப்படி கண்டுபிடிப்பது?
- இத்தளங்கள் எப்படி செயல்படுகின்றன?
- எப்படி விளம்பரங்களைக் காண்பதற்காக பணம் கொடுக்க முடிகிறது?
- பி.டி.சி தளங்களின் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
- பிடிசி தளங்களில் வேலை செய்வது எப்படி?
- பிடிசி தளங்களில் விளம்பரங்களை கிளிக் செய்வது எவ்வாறு?
- முக்கியமான பிடிசி தளங்கள் எவைஎவை?
- அதிகம் பிடிசி தளங்களில் மூலம் சம்பாதிக்கும் நுட்பம் மற்றும் வழிமுறைகள் என்னென்ன?
- பிடிசி தளங்களில் 'ரெஃப்ரல்' மூலம் சம்பாதிப்பது எப்படி?
என்பவைகளைப் பற்றி இனி வரும் அடுத்தடுத்த பதிவுகளில் தெளிவாக தெரிந்துகொள்வோம்.
உங்களுக்கு இணையத்தின் மூலம் மிக குறைந்த நேரத்தில் பணம் சம்பாதிக்க விருப்பமெனில் தளத்தில் மேலுள்ள NEOBUX மற்றும் CLIXSENSE பேனர்களில் கிளிக் செய்து நீங்களும் அத்தளத்தில் இணைந்துகொள்ளுங்கள். அடுத்த பதிவில் நியோபக்சில் விளம்பரங்களை கிளிக் செய்து வருமானம் ஈட்டுவது எப்படி என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். NEOBUX மற்றும் CLICXSENSE தளங்களில் இணைந்த நண்பர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு...
- தங்கம்பழனி