வணக்கம் நண்பர்களே...!
கடந்த நான்கு நாட்களாக முக்கியமான அலுவல் காரணமாக பதிவெதுவும் எழுத முடியவில்லை.
கடந்த பதிவில் இதையும் இழக்க வேண்டுமா? என்பது இப்பதிவில் குழப்பத்தை மனதில் இருந்து நீக்கினால் தெளிவான மனநிலையைப் பெற முடியும் என்பது குறிப்பிட்டிருந்தோம்.
மனித வாழ்வில் இழக்க கூடாதது ஒன்றிரண்டு உள்ளது. சில சமயம் அதையும் கூட இழக்கலாம் என்கிறார் அறிஞர் ஒருவர். என்ன அது? பதிவின் இறுதியில் பார்ப்போம். அதற்கு முன்பு இந்த சிறு உதாரண மேற்கோளைக் காண்போம்
பாடுபட்டு சேர்த்து வைத்த அனைத்து தானியங்களையும் ஒரே நாளில் புயல் வந்து அடித்துசென்றாலும், ஓர் இனம் மட்டும் தனக்குத் தேவையான தானியங்களைப் பெற்றிருக்கும். தன்னுடைய இலக்கை நோக்கிய பயணத்தில் மட்டுமே கவனம் செலுத்தும். அதன் பாதையை விட்டு என்றுமே விலகியதில்லை.
வேண்டிய தானியங்களை சேமிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை மழையிலிருந்து நனையாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துகொள்ளும்.
தனக்குத் தேவையிருக்காதே என்று ஒரு நாளும் கிடைத்ததை மட்டும் உண்டு வாழாது.
நீங்கள் யூகித்திருப்பீர்கள். அந்த உயிரினம் எறும்புதான். சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அவ்வினம் தன்னுடைய வெற்றியை நோக்கியப் பயணத்தில் எந்த தடைகள் வந்தாலும் எதிர்கொண்டு போராடி வெற்றிபெறும். அவ்வாறு வெற்றிப்பெறும் போராட்டத்தில் அது தன்மானம் பார்ப்பதில்லை...
காலங்காலமாய் பயற்சி செய்து, கண்ணும் கருத்துமாக செயல்பட்டு, சரியான சமயம் வரும்போது ஏற்படும் இடையூறு, தடங்கள், மற்றும் சில பிரச்னைகளால் தன்மானத்தை முன்னிறுத்தி, வருகின்ற வாய்ப்பை தட்டிக் கழிக்கும் தன்மானச் சிங்கங்கள் (மனிதர்கள்) இன்றும் இருக்கவே செய்கின்றனர்.
ஆனால் அவர்கள் நிச்சயம் வாழ்வில் வெற்றிபெற முடியாது. நமக்குத் என்ன தேவையோ, நம் வாழ்வின் லட்சியம் எதைநோக்கி பயணம் மேற்கொள்கிறதோ அதை மட்டுமே மனதில் முதன்மைப்படுத்தி, மற்ற உணர்வுகளை வாழ்வில் இழந்துதான் ஆக வேண்டும்.. சில சமயங்களில் அது தன்மானமாக கூட இருக்கலாம்..
சாதிக்க இது போதுமா?
இல்லையில்லை... வேறென்ன வேண்டும்?
அடுத்த பதிவில் பார்ப்போம்.
- தங்கம்பழனி