இதையும் கூடவா இழக்க வேண்டும்? என்ற கேள்வியிலேயே அது அவ்வளவு சாதாரணமானதா என்று தோன்றும்.
ஆம் அது தான் 'குழப்பம்'.
'கோபம், பொறாமை' க்கு அடுத்து மிஞ்சுவது குழப்பம்தான்.
'கோபம், பொறாமை' க்கு அடுத்து மிஞ்சுவது குழப்பம்தான்.
அந்த குழப்பத்தை தூக்கி எறிந்துவிட்டு, சட்டென அந்த நொடியில் இருந்து, அந்த மனநிலையிலிருந்து வெளியே வந்தால் நல்ல தெளிவான மனநிலையை பெற்றுவிடலாம். இதற்கு மனப் பயிற்சி அவசியம் தேவை.
குழப்பமான மனநிலையிலிருந்து 'சட்'டென விலக முடியுமா? என்றால் முடியும்.
எந்த ஒரு 'மன நிலை'யையும் நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம்.. நம்மால் உருவாக்கப்பட்ட ஒரு நிலையை, நமக்கு நாமே உடனே மாற்றிக்கொள்ள முடியும். அது நம்மிடத்தில்தான் உள்ளது. மற்றவர்கள் வந்து அறிவுரை கூறி சிறிது சிறிதாக மாற்றுவதைக் காட்டிலும் 'சட்'டென முடிவெடுத்து இந்த குழப்பத்திற்கு நாம் தான் காரணம். இனி எக்காரணத்தைக் கொண்டும் குழம்ப மாட்டேன் என்று நினைத்தாலே போதும். அந்த நொடிலியிலிருந்து தெளிவான மனநிலையைப் பெறலாம்.
குழப்பம் நீங்கிவிட்டால் தெளிவு பிறக்கும். தெளிவான மனநிலையில் வெற்றிக்கான சிந்தனைகள் பிறக்கும்.
குழப்பத்தை நீக்கிவிட்டால் மட்டும் போதுமா என்ன... ? சாதிக்க வேறென்ன வேண்டும்?
நாளை பார்க்கலாம்..
- தங்கம்பழனி