வணக்கம் நண்பர்களே..! கடந்த பதிவில் மனிதனின் முதல் எதிரி கோபம். அந்த கோபத்தை இழந்தால் கட்டாயம் சாதிக்க முடியும் என்ற கருத்து இடம்பெற்றிருந்தது.
மனித குணங்களில் வெற்றிப் பாதைகளை அடைக்கும் ஒரு தடைக்கல் பொறாமை. இது மனிதர்களுக்கு இயல்பான குணங்களில் ஒன்று. பக்குவப்பட்ட மனதை கொண்டவர்கள் தவிர, மற்றவர்கள் யாவருமே இந்த குணத்திற்கு ஆளாகியே தீருவார்கள். யாரும் இதற்கு விதிவிலக்கு அல்ல..
கடந்த பதிவில் ஆட்சென்ஸ் துரோகம் என்ற ஒன்றை குறிப்பிட்டிருந்தேன்.. கூகிள் ஆட்சென்ஸ்சை முறையாக பயன்படுத்தினாலும், தளத்தில் என்னையுமறியாமல் கூகிளின் விதிமுறைகளுக்கு புறம்பான சில பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அப் பதிவுகளை குறிப்ப்பிட்டு, "பெயரிலி" ஒருவர் கூகிளிடம் புகார் செய்து கூகிள் விளம்பரங்களை "டெக்தங்கம்" தளத்தில் இடம் பெற முடியாதபடி தடை செய்துவிட்டார்.
அப்பதிவிற்கு கருத்து தெரிவித்த திரு "மென்பொருள்" பிரபு அவர்கள்... பாதிக்கப்பட்ட ஒருவன், "தனக்கு ஒரு விதிமுறை, மற்றவர்களுக்கு ஒரு விதிமுறையா என்று நினைத்து புகார் தெரிவித்திருக்கலாம்.. அந்த பெயரிலி செய்ததும் அதுவும் சட்டப்படி சரியே.." என்று தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.
அவர் குறிப்பிட்டதும் உண்மைதான்.. ஆனால் அந்நிகழ்வுக்கு முக்கிய காரணம் "பொறாமை" குணம்தான்.
மற்றவர்களின் மீது பொறாமை குணம் வளர, 'முகம்' தெரிய வேண்டிய அவசியமில்லை என்பது இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அச்செயலின் மூலம் பொறாமை குணம் கொண்டவருக்கு எந்த இலாபமும் ஏற்பட போவதில்லை.
இதுபோன்ற பொறாமை குணத்தால்தான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட 'கோபமும்' தூண்டப்படுகிறது..
எந்த ஒரு செயலானாலும் அதை முறையாக செய்யவோ, வெற்றிப் பெறவோ வேண்டுமெனில் மனதில் பொறாமை என்ற அரக்கனை விரட்டி அடிக்க வேண்டும். அப்படி பொறாமை குணம் இருந்தால், கண்டிப்பாக மனதை ஒரு முகப்படுத்த முடியாது.. ஒரு நிலையில் இல்லாத மனதைக் கொண்டு எந்த செயலையும் வெற்றிகரமாக செய்ய முடியாது.
பொறாமையை கைவிடுங்கள்... !
பொழுதுபோக்கு, கோபம், பொறாமை இவைகளை கைவிட்டால் சாதிக்க முடியுமா?
முடியாது.
வேறென்ன செய்ய வேண்டும்.. ?
நாளை பார்க்கலாம்.
- தங்கம்பழனி
தொடரும்.