கடந்த பதிவில் எதை இழக்க வேண்டும்? என்பதை பார்த்தோம். அதன் தொடர்ச்சியே இப்பதிவும்..
ஒரே வினாடியில் மிகவும் ஆபத்தான முடிவுகளை எடுக்க கூடிய வல்லமை இதற்கு உண்டு.
இது சிந்தனையை மழுங்கடித்துவிடும்.
உண்மை என்ன என்பதை ஏற்க மறுக்கும்.
சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தான செயல்களில் கூட ஈடுபட வைத்துவிடும்.
அது என்ன குணம் என்று நீங்களே யூகித்திருப்பீர்கள். ஆம் அதுதான் கொடிய கோபம். மனிதர்களுக்கு தேவையில்லா குணம் என்று கூட இதைச் செய்யலாம். ஒன்றைச் சொல்லலாம்.
கோபம்தான் மனிதனின் முதல் எதிரி...
பல வெற்றிகளை , பல சாதனைகளை செய்ய விடாமல் செய்யும் முதல் எதிரி..
சாதாரணமாக, அமைதியுடன் இருக்கும் ஒருவரை கூட ஒரு சில வினாடிகளில் 'கோபம்' அவரை மிகப் பெரிய கொலைகாரனாக மாற்றிய சம்பவங்களும் நடைப்பெற்றுள்ளது. நீங்களும் கேள்விபட்டிருப்பீர்கள். "அவனா அப்படி செய்தான்.. அவன் ரொம்ப நல்லவனாச்சே.. அவன் அதை செய்தான் சொன்னா என்னால நம்பவே முடியல..." என்று ஆச்சர்யப்பட்டு இருப்பீர்கள். அந்தளவிற்கு ஒரு நல்லவனைக் கூட கோபம் முரடனாக, கொலைகாரனாக, பாவியாக மாற்றிவிடும் தன்மை கொண்டது.
எல்லாம் ஒரு நிமிடத்தில் நடந்துவிடும். ஆனால் அடுத்து வரும் விளைவுகளைப் பற்றி ஆயுள் முழுவதும் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
எத்தனையோ கொலைக் குற்றவாளிகள் இதுபோல வருந்திக்கொண்டு உள்ளனர். வாழ்நாளில் தாம் கோப்பபட்ட
அந்த சில வினாடிகள்...
அந்த சில நிமிடங்கள்....
தன்னுடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டதை எண்ணி சிறையில் இன்றும் கூட வருந்திக்கொண்டு இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கோபத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்? நம்முடைய தளத்தில் ஏற்கனவே இடம்பெற்ற கோபத்தை அடக்க எளிய வழிமுறைகள் என்ற பதிவு ஒரு நல்ல தீர்வை வழங்கும்.
கோபத்தை மட்டும் இழந்தால் சாதனை செய்துவிட முடியுமா?
வேறென்ன செய்ய வேண்டும்?
நாளை பார்ப்போமே..
- தங்கம்பழனி
தொடரும்..