--> Skip to main content

நியோபக்ஸ் விளம்பரங்களை கிளிக் செய்வது எப்படி?(வீடியோ)

வணக்கம் நண்பர்களே.!

கடந்த பதிவில் இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கான பயனுள்ள குறிப்புகள் பற்றிப் பார்த்தோம். அவற்றில் பிடிசி தளங்கள் பற்றியும், அதில் நம்பகமான, முதன்மையான இரு தளங்கள் கிளிக்சென்ஸ் மற்றும் நியோபக்ஸ் தளங்களைக் குறிப்பிட்டிருந்தேன். 

நியோபக்ஸ் தளத்தில் விளம்பரங்களை கிளிக் செய்வதைப் பற்றிப் பார்ப்போம். அதற்கு நீங்கள் முதலில் கீழுள்ள பேனரில் கிளிக் செய்து அத்தளத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஏற்கனவே இணைந்தவர்கள் விளம்பரங்களை எப்படி கிளிக் செய்வது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு சில நண்பர்கள் தளத்தில் இணைந்துவிடுவதோடு இருந்துவிடுகிறார்கள். அத்தளத்தில் உள்ள விளம்பரங்களை எப்படி கிளிக் செய்வது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லது கிளிக் செய்யாமலேயே சென்றுவிடுகிறார்கள். அவ்வாறு விளம்பரங்களை கிளிக் செய்யவில்லை எனில் மூன்று நாட்களுக்குப் பிறகு உங்களுடைய நியோபாக்ஸ் அக்கவுண்ட்டை தானாகவே நீக்கிவிடுவார்கள். அதைத் தவிர்க்க நியோபக்ஸ் தளத்தில் உள்ள ஆரஞ்சு வண்ண விளம்பரங்களையாவது நீங்கள் கண்டிப்பாக கிளிக் செய்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய அக்கவுண்ட் ஆக்டிவ்-ல் இருக்கும். 

சரி.. கீழுள்ள வீடியோவில் நியோபக்ஸ் தளத்தின் மூலம் விளம்பரங்களை எவ்வாறு கிளிக் செய்வது என்பதை தெளிவாக காட்டியிருக்கிறேன். அதாவது  நீங்கள் நியோபக்ஸ் தளத்தில் லாகின் செய்துகொள்ளுங்கள். அதன் பிறகு மேலுள்ள View Advertisement என்னும் டேபை(Tab) கிளிக் செய்தாங் உங்களுக்கு விளம்பரங்கள் காட்டப்படும். அதில் உங்களுடைவிளம்பரப்பெட்டியைக் கிளிக் செய்து அதில்  "ரோஸ், பச்சை, ஆரஞ்சு" வண்ண பட்டைகளுடன் விளம்பரப் பெட்டிகள் தோன்றும். ஒவ்வொரு விளம்பரத்தையும் கிளிக் செய்யும்போது உங்களுக்கு  சிவப்பு நிற சிறிய வட்ட வடிவ பட்டன் தோன்றும். அதன் மீது நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். அவ்வாறு கிளிக் செய்யும்போது உங்களுக்கு புதிய விண்டோவில் விளம்பரங்கள் அல்லது விளம்பரம் அடங்கிய தளம் தோன்றும். வீடியோவில் தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது. வீடியோவில் உள்ளபடி உங்களுடைய விளம்பரங்களைக் கிளிக் செய்து கணிசமான வருமானத்தை ஈட்டிடுங்கள். 

(முக்கிய குறிப்பு: ஒரே சமயத்தில் பல்வேறு டேப்களில் விளம்பரங்களை கிளிக் செய்து திறக்க கூடாது. ஒரு விளம்பரம் கிளிக் செய்தவுடன், அது முடியும்வரை காத்திருந்து, விளம்பரம் அல்லது விளம்பரத்தளத்தில் Close பட்டன் வரும் வரை காத்திருக்க வேண்டும். அல்லது அந்த பக்கத்தில் கீழாக மஞ்சள் பட்டை "லோட்" ஆகி முடியும்வரை காத்திருந்து "பச்சை" நிறப்பட்டை தோன்றிய பிறகுதான் அந்த விண்டோவை மூட வேண்டும். பிறகு அடுத்த விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும். இது தான் முக்கியமான விதிமுறை.  இவ்வாறு தளத்திலுள்ள "ரோஸ், பச்சை, ஆரஞ்சு" நிறத்தில் காண்பிக்கப்படும் அனைத்து விளம்பரங்களையும் கிளிக் செய்து முடிக்க வேண்டும். ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து முடிக்க உங்களுக்கு 0.5 செகண்ட் மட்டுமே தேவைப்படும். அடுத்த பதிவில் கிளிக்சென்ஸ் மூலம் விளம்பரங்களை கிளிக் செய்து பணம் சம்பாதிப்பது பற்றி தெரிந்துகொள்வோம்)

நியோபக்சில் விளம்பரங்களை கிளிக் செய்வது எப்படி?


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar