How to type in Gamil
வணக்கம் நண்பர்களே..!நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஜிமெயிலில் தமிழ் தட்டச்சு தெரியாமலேயே தமிழில் எழுதி மின்னஞ்சல் அனுப்ப முடியும்.
தமிழை தட்டச்சிட்ட உங்கள் ஜிமெயில் செட்டிங்சில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அது என்னென்ன மாற்றங்கள் என்பதைப் பார்ப்போம்.
- அதில் செட்டிங்ஸ் (Settings) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- தோன்றும் விண்டோவில் Language என்பதில் நேராக உள்ள Show all language options என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது தோன்றும் விண்டோவில் Enable input tools என்பதில் 'டிக்' மார்க்கை ஏற்படுத்தவும்.
- இப்பொழுது INPUT TOOLS என்ற விண்டோ தோன்றும்.
- அதில் தமிழ் போனடிக் என்பதை டபுள் கிளிக் செய்வதன் மூலம் தமிழ் போனடிக் அமைப்புத் தேர்ந்தெடுக்கப்படும். இறுதியில் ஓ.கே கொடுத்துவிட்டு, செய்த மாற்றங்களை கீழே உள்ள Save Settings என்பதை அழுத்தவும். இப்பொழுது மாற்றங்கள் சேமிக்கப்பட்டுவிடும்.
அதைப் பயன்படுத்தி நீங்கள் எளிதாக தமிழில் தட்டச்சிட முடியும்.
நன்றி.
- தங்கம்பழனி.