Windows Phone 8 Applications for their users
ஆண்ட்ராய்ட் வகை மொபைல் போன்களை அதிகம் விரும்பினால் விண்டோஸ் போனைப் பயன்படுத்துபவர்களும் எண்ணிக்கையில் கணிசமாக இருந்துகொண்டேதான் உள்ளனர். நீங்கள் ஒரு விண்டோஸ் பயனர் எனில் நிச்சயம் உங்களுக்கு இப்பதிவு உதவும்.
உங்களுடைய விண்டோஸ் போனுக்கான இலவசமான அப்ளிகேஷன்களை, உதாரணமாக விளையாட்டுக்கள், உங்களுடைய வேலையை விரைவாக முடிக்க, தேடல்கள், வரைபடங்கள் உள்ளிட்ட பயண வழிகாட்டிகள், இசை மற்றும் தகவல் தொடர்புக்கு பயன்படும் பயன்பாடுகள் ஆகியவற்றை windows Marketplace for Mobile சேவையின் வழியாக நீங்கள் பெற முடியும்.
இத்தளத்தில் செய்தி, வானிலை, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு, விளையாட்டு என பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஆயிரக்கணக்கான அப்ளிகேஷன்களை விண்டோஸ் போன் பயனாளர்களுக்காக சேர்த்துள்ளனர்.
இதில் உள்ள மிகப்பெரும்பாலான பயன்பாடுகள் அனைத்தும் இலவசமே.. ஆனால் ஒரு சில third party application களை மட்டும் பணம் கொடுத்து வேண்டியதிருக்கும்.
விண்டோஸ் போனிலிருந்து விண்டோஸ் மார்க்கெட் ப்ளேஸ் சேவையை பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. நீங்கள் விண்டோஸ் போன் 6.5 பயன்படுத்துபவர் எனில் ஸ்டார் மெனுவிற்கு செல்லுங்கள்.
2. நீங்கள் விண்டோஸ் போன் 6.0 அல்லது 6.1 பயன்படுத்துவோர் எனில் நேரடியாக உங்கள் மொபைல் பிரௌசரில் இருந்து http://mp.windowsphone.com தளத்திற்கு செல்லவும்.
3. அங்கு இருக்கும் பயன்பாடுகளில் உங்களுக்கு விருப்பமான தேர்ந்தெடுத்து நேரடியாக உங்களுடைய போனில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
உங்களுக்கான விண்டோஸ் போன் 8 அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய தளத்திற்கான சுட்டி: Download Windows Phone 8 Applications
If you are, windows phone eight users, you can download applications from windows Marketplace for Mobile. All type of application available here like News, weather, information, communication, entertainment, sports applications. Many applications are free. Few applications are third party applications; if you want those applications, you must pay and get it.
நன்றி.
-தங்கம்பழனி