கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில் ஆணைத்தொடர், ஆணைத் தொகை, கட்டளைப் பட்டியல் அல்லது நிரல் என அர்த்தம் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு கணிப்பொறியின் செயலை, நடத்தையைக் கட்டுப்படுத்த இந்த ஆணைத்தொடர்கள் (Program) பயன்படுகின்றன.
ஒரு கணிப்பொறியை பாட்டுப்பாட வைக்கவோ, அச்சிடவோ அல்லது பில் தயாரிக்கவோ கொடுக்கப்படும் வெவ்வேறு ஆணைத் தொகுப்புகளைத்தான் ப்ரோகிராம் (Program) என்பர்.
இந்த ஆணைகள் அல்லது ஆணைத்தொடர்கள், அல்லது கட்டளைகள் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய எந்த ஒரு மொழியிலும் (Computer Language) இருக்கலாம். (கணினி மொழி கற்க கணினி மொழிகளைக் கற்க ஆர்வமுள்ளவரா நீங்க? என்ற இப்பதிவு உங்களுக்கு உதவும். )
இந்த ஆணைகளை எழுதுபவர்களுக்கு 'புரோகிராமர்' (Programmer) என்று பெயர். தமிழில் இவர்களை ஆணையர் எனவும் அழைக்கலாம். தற்காலத்தில் கணினிகளுக்கான ஆணைத்தொகுப்புகள் எழுதுபவர்களுக்குத்தான் அதிக ஊதியம் கிடைக்கிறது. அதுவும் சிஸ்டம் ப்ரோகிராம் எழுதுபவர்களுக்குத்தான் அதிக சம்பளம்.
சிஸ்டம் புரோகிராம் (System Program) என்பது கணினிகளைச் செயல்படுத்த உள்ள கருவிகளைப் போன்று செயல்பட உருவாக்கும் நிரல்களாகும். உதாரணமாக 'ஆப்பரேட்டிங் சிஸ்டம்' (Operating System). 'கம்பைலர்' (Compiler) போன்ற ஆணைத்தொடர்கள் சிஸ்டம் புரோகிராம் வகையைச் சார்ந்தது.
மற்றொன்று அப்ளிகேஷன் புரோகிராம். இந்த அப்ளிகேஷன் புரோகிராமை வைத்து கணினியைக் கணக்குப் போட வைக்கலாம். ஒரு நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கான சம்பளப் பட்டுவாடாவை நடத்தலாம். இந்த வகை புரோகிராம்கள் Application Programs எனப்படுகிறது.
ஆக புரோகிராம்களில் இரண்டு வகை உள்ளது. ஒன்று சிஸ்டம் புரோகிராம். மற்றொன்று அப்ளிகேஷன் புரோகிராம்.
இனி புரோகிராம் என்றால் நிகழ்ச்சி நிரல்தானே என்று கேட்கலாம் நீங்கள்.. ஆம். புரோகிராம் என்பதை நிகழ்ச்சி நிரல் என்றும் கூட சொல்லலாம். காரணம்.. ஒவ்வொரு நிகழ்வையும், ஏற்கனவே தன்னகத்தே நிரல்களாகவும் நிரல் தொகுப்புகளாகவும் கொண்டிருப்பதால் அவற்றை புரோகிராம் அல்லது நிகழ்ச்சி நிரல் அல்லது நிரல் என அழைப்பதிலும் தவறில்லை. அனைத்திற்குமே பொருள் ஒன்றுதான்..
நன்றி
- தங்கம்பழனி.