--> Skip to main content

பிளாக்கரில் புதிய கான்டாக்ட் பார்ம் விட்ஜெட் வசதி..!

பிளாக்கர் தளத்தில் கான்டாக்ட் பார்ம் வைப்பதற்கு 'third party contact form coding' ஐப் பயன்படுத்தி வந்தோம். 

தற்பொழுது அதை எளிதாக்கும் பொருட்டு பிளாக்கரே புதிய கான்டாக்ட் பார்ம் விட்ஜெட்டை அறிமுகம் செய்துள்ளது. இதனால் காண்டாக்ட் பார்ம் நிரல்வரிகளை இணைத்து தளத்திற்கான கான்டாக்ட் பார்ம் உருவாக்க தேவையில்லை. நான்கு கிளிக்களிலேயே தளத்தில் கான்டாக்ட் பார்ம் விட்ஜெட் சேர்க்க முடியும்.

கான்டாக்ட் பார்ம் ஏன்? எதற்கு? 

வலைப்பூவின் வாசகர்கள் வலைப்பூவின் உரிமையாளரை தொடர்புகொள்ள இந்த கான்டாக்ட் பார்ம் உதவுகிறது. அதாவது வலைத்தளத்தில் இருந்தவாறே, அத்தளத்தின் உரிமையாளருக்கு தகவல்களை அனுப்ப பயன்படுவதுதான் 'கான்டாக்ட் பார்ம்'. 

இதில் வேண்டிய தகவல்களை பரிமாற முடியும். 

பிளாக்கரில் காண்டாக்ட் பார்ம் விட்ஜெட் சேர்ப்பது எப்படி? 

  1. வழக்கம்போல பிளாக்கர் தளத்தில் உள் நுழைந்துகொள்ளுங்கள் (Login). 
  2. LayOut தேர்ந்தெடுங்கள்
  3. அதில் Add Gadget என்பதை கிளிக் செய்யுங்கள்
  4. தோன்றும் பெட்டியில் வலது புறமாக உள்ள More Gadget என்பதில் கிளிக் செய்யுங்கள். 
  5. தோன்றும் பெட்டியில் முதலாவதாக உள்ள Contact Form New என்பதில் உள்ள '+' யை கிளிக் செய்யுங்கள். 
  6. இப்போது காண்டாக்பார்ம் விட்ஜெட் திறக்கும். அதில் Title என்பதில் Contact Form என இருக்கும். அதை நீக்கிவிட்டு, 'தொடர்புக்கு' அல்லது 'தொடர்புகொள்ள' என தட்டச்சிட்டு இறுதியாக மாற்றத்தை சேமிக்கவும் (Save). 
  7. அவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கரில் கான்டாக்ட் பார்ம் விட்ஜெட் சேர்ந்திருக்கும். தளத்தை புதிய விண்டோவில் திறந்து பார்க்கவும். (நமது டெக் தங்கம் தளத்தில் இடபுறப் பட்டையில் புதிய கான்டாக்ட் பார்ம் இம்முறையில் சேர்க்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்.)
படங்கள்: 

ADD contact form gadget - 1

ADD contact form gadget - 2

contact form

கான்டாக்  பார்ம் பயன்படுத்துவது எப்படி? (வாசகர்களுக்கு)

  • தளத்தில் உள்ள காண்டாக் பார்மில் உள்ள Name என்பதில் உங்கள் பெயரை உள்ளிடுங்கள். 
  • Email என்பதில் உங்களது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்.
  • பிறகு Message என்பதில் நீங்கள் வலைத்தள நிர்வாகிக்கு அனுப்ப வேண்டிய செய்தியை தட்டச்சிடுங்கள். 
  • இறுதியாக கீழிருக்கும் SEND பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  •  நீங்கள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் வலைதளத்தை நடத்துபவர்களுக்குச் சென்றடைந்துவிடும்.
  • பிறகு அத்தகவல்களுக்கு உரிய பதிலை, தளத்தின் உரிமையாளர் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும். 


நன்றி. 

-தங்கம்பழனி


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar