வணக்கம்.. இது தங்கம்பழனியின் தனிப்பட்ட எண்ணங்களை பிரதிபலிக்கும் பதிவு..
தங்கம்பழனி வலைத்தளத்தில் எனக்குத் தெரிந்த விடயங்களை மட்டுமே பதிவாக எழுதி வருகிறேன்.. ஒரு சில பதிவுகளில் தினச் செய்திகளை அடிப்படையாக கொண்டும் சில பதிவுகள் வெளிவருகின்றன.
தங்கம்பழனி என்பவர் சாதாரண தனிப்பட்ட மனிதன் மட்டுமே...அரசு வழங்கும் இலவச அரிசியும், மலிவு விலையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தியும் தான் எனது குடும்பத்தை நிர்வகிக்கிறேன்..
உண்மையைச் சொல்லப்போனால் சுமார் ஒன்றரை லட்சத்திற்கு கடன் வாங்கி அதற்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவிக்கும் ஒரு ஏழை வலைப்பதிவர்.
சாதாரண ஒரு தொகுப்பு வீட்டு கட்டுவதற்காக இக்கடனை வாங்கி, அல்லும் பகலும் பாடுபட்டு, மாதம் 5000 ரூபாய் வட்டி கட்டுவதற்கே இயலாத சூழலில் வாழ்ந்து கொண்டுள்ளேன். (என்னுடைய சூழல் ஒரு சில சக பதிவர்களுக்கு மட்டுமே தெரியும். )
இச்சூழ்நிலையிலும் கூட நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தங்கம்பழனி தளத்தை டெக் தங்கமாக மாற்றி அதில் எழுதிக்கொண்டுள்ளேன். இதில் யாரும் பாதிக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.. என்னால் பலபேர் பயனடைந்துள்ளார்கள் என்ற ஒரு விஷயத்தை தவிர இத்தளத்தின் மூலம் நான் இதுவரைக்கும் எந்த ஒரு வருமானத்தையும் பார்த்ததில்லை..
தளத்தில் வெளியாகும் கூகிள் ஆட்சென்ஸ் முதலான விளம்பரங்களைப் பற்றியும், தேவையில்லாத விமர்சனங்களையும் வெளியிடும் அனானி நண்பர்களே...!
உங்களுக்கு இதனால் ஏதேனும் 'பத்து பைசா' வருமானம் வரும் எனில் என்னைப் பற்றியும், என்னுடைய தளத்தைப் பற்றியும் கூகிளிடம் புகார் தெரிவியுங்கள். நிச்சயம் மகிழ்வேன்..
அப்படி தங்கம்பழனி தளத்தில் மற்றவர்களைப் பாதிக்கும் வகையிலான பதிவுகளோ அல்லது சட்டத்திற்கு புறம்பான பதிவுகளோ இருப்பின் அவற்றை எனக்கு குறிப்பிடுங்கள்.. நிச்சயமாக அவற்றை நீக்கிவிடுவேன்..
அதைவிட்டுவிட்டு, இப்படி நியாயம், தர்மம், விதி முறைகளை என பேசும் நீங்கள் முகம்தெரியா மனிதராக வந்து கருத்திடுவது மட்டும் முறையா என்ன?
உண்மையிலேயே நீங்கள் உத்தமராக இருப்பின், நீங்கள் யார்? எங்கிருந்து கருத்துரை எழுதுகிறீர்கள் என உங்களுடைய உண்மையான முகத்தை காட்டலாமே..?
வாழ்வா சாவா? என்ற நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் எனக்கு இதுபோன்ற கருத்துகளை எழுதி என்னுடைய மனதை புண்படுத்த நினைப்பதால் உங்களுக்கு என்ன இலாபம்?
முடிந்தால் எனக்கான கடனை அடைத்து நான் மகிழ்ச்சியுடன் வாழ எனக்கு வழிவகை செய்யுங்கள்..
இதோ என்னுடைய சொந்த வீட்டு முகவரி..
நேரிலேயே நீங்கள் இந்த முகவரியில் சந்திக்கலாம்..
நான் சட்ட விரோதமாக விளம்பரங்கள் இடுகிறேன் என்று புகார் அளிக்கும் அனானி நண்பர்களே.. இதோ என்னுடைய வங்கி கணக்கு...
இந்த கணக்கிற்கு உங்களுடைய பெருந்தன்மையையும், பணக்காரத்த அக்கறையையும் காட்டுங்களேன்..!
அன்றாடம் கடன்காரர்களுக்கு நான் சொல்லும் பதிலுக்கு நீங்கள் முற்றுப் புள்ளி வைக்கலாமே..!
நான் தவறான வழியைப் பயன்படுத்துகிறேன் என்று என் மீது அக்கறை கொள்ளும் அனானிகளே..!
நீங்கள் உண்மையானவராக கூகிள் விதிமுறைகளை மதிப்பவராக இருப்பின் அதைச் செய்யலாமே..????
அதைவிட்டு, ஏதோ இந்த உலகத்தில் தமிழ்தளங்களிலே எந்த ஒரு விளம்பரமும் இடம்பெறாதது போலவும், டெக் தங்கம் தளத்தில் மட்டுமே விளம்பரம் இடம்பெறுவதும் போலவும் மாரடித்து கொள்ளும் நீங்கள் உண்மையிலேயே யோக்கியம்தானா?
நானும், ஊனும் உயிருமுள்ள ஒரு மனிதன்தான்.. எனக்கும் அனைத்து உணர்வுகளும், உணர்ச்சிகளும் உண்டு...
ஏதோ விளம்பரத்தால் ஆயிரக்கணக்கில், கோடிக்கணக்கில் என்னிடத்தில் பணம் புரளுவதாக நினைத்து நீங்கள் போடும் ஆட்டம் உண்மையிலேயே ஒரு ஏழை வலைப்பதிவரின் வயிற்றெரிச்சலையும், சாபத்தையும் பெறுமே தவிர, நீங்கள் செய்யும் செயலால் உங்கள் குடும்பம் தழைக்கும் என்று மட்டும் கனவு காணாதீர்கள்... !!!
இதுபோன்ற விளம்பரங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் எனக்கு அன்றாடம் பத்து ரூபாய் கூட கிடைப்பதில்லை.. ஏதோ ஒரு நப்பாசையில் நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் கூகிள் ஆட்சென்ஸ் பயன்படுத்தினேன்.. இதில் தவறு என்று மட்டும் கூகிளுக்கு புகார் அளிக்க முடிந்த உங்களால், அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்கவும், என்னுடைய பொருளாதார பிரச்னைகளையும் தீர்க்க முடியும்தானே.. அதுதானே என் மீது நீங்கள் கொண்ட உண்மையான அக்கறையாக இருக்க முடியும்.
அன்றி அதை பொறாமை என்றுதானே சொல்ல முடியும்? யோக்கியனாக, உண்மையானவாக இருந்தால் என்னைத் தொடர்புகொண்டு பேசலாமே..!
அதைவிட்டு அனானியாக வந்து கருத்திட்டு, அதன்மூலம் என்னை எச்சரிக்கை செய்யவோ, கருத்திட்டு மனதை புண்படுத்த நினைப்பதன் மூலம் உங்களுக்கு ஏதாவது இலாபம் உள்ளதா என்ன?
அப்படி உங்களுக்கு ஏதாவது இலாபம் இருப்பின் அதை தெரிவியுங்களேன்.. நீங்களாவது அந்த இலாபத்தை அடைய நான் இனி வலைத்தளத்தில் எழுவதை நிறுத்தி விடுகிறேன். ஏன் இந்த வலைத்தளத்தையே அழித்துவிடுகிறேன்.
அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் என் மீது பொறாமைப்பட்டு அக்காரியத்தை செய்திருப்பீர்களேயானால் நிச்சயம் நீங்கள் சாதாரண பிறவியாக இருக்க மாட்டீர்கள். இழி குலப் பெண்ணின் வாரிசாக, பரத்தைக்குப் பிறந்த பரதேசியாக, பன்றிக்கு பிறந்தவனாக மட்டுமே இருக்க முடியும்.. அவ்வாறான இழிவானவர்கள்தான் இத்தகைய செயல்களையும் தகாத வார்த்தைகளையும் எழுதி வருவார்கள்..
மேற்கண்ட வார்த்தைகளே போதும்.. இனி வாழ்நாள் முழுமைக்கும் நீங்கள் நாணி.. கோணி...அவமானமடைய...
டெக்தங்கம் வாசகர்களின் ஆதரவும், சக வலைப்பதிவர் நண்பர்களின் உறுதுணையும் இருக்கும் வரை தொடர்ச்சியாக தளத்தில் பதிவுகள் வெளிவந்துகொண்டே இருக்கும் அனானியே...!
இப்பதிவின் மூலம் அனானி நண்பனை திட்டுவதற்காக மட்டும் எழுதப்பட்டதல்ல.. ஒரு பதிவரை எப்படியெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாக்க முடியுமோ.. அப்படியெல்லாம் ஆளாக்குவதற்கெனவே ஒரு சில பரத்தைக்குப் பிறந்த இழிகுல அனானிகள் இருக்கவே செய்கின்றனர் என்பதை உங்களுக்கும் அறியத் தரவே இப்பதிவு..
இந்த அனானிகளைப் பற்றி நான் எப்பொழுதுமே கவலைப்பட்டதில்லை.. காரணம் முகம் தெரியாமல் வந்து இவர்கள் என்ன சாதித்து விடப் போகிறார்கள் ஒன்றுமில்லை.. இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் மூலம் அவர்களை வெளிச்சப்படுத்தி என்னுடைய அன்பு வாசகர்களின் நேரத்தையும், சக வலைப்பதிவர் தோழர்களின் நேரத்தையும் நான் வீண்டிக்க விரும்பியதில்லை. எனவே தான் இத்தனை காலங்களிலும் எனக்கு வந்த இதுபோன்ற இழிவான வார்த்தைகளையும், கருத்துகளையும் நான் வெளிப்படுத்தியதில்லை..
பதிவில் குறிப்பிட்ட தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியமைக்கு மன்னியுங்கள் நண்பர்களே...!