குறைந்த விலை டச் ஸ்கிரீன் போன்கள்...
சாம்சங், நோக்கியா,சோனி, எல்ஜி போன்ற சிறந்த நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி வருபைவை ஆண்ட்ராய்ட் வகை டச் ஸ்கிரீன் மொபைல்கள். இமயமலை உயரத்திற்கு அதிக விலைகொண்ட போன்களும், அதளபாதாளம் வரையுள்ள மிக குறைந்த விலையுள்ள போன்களையும் வெளியிடுவதுதான் இத்தகைய நிறுவனங்களின் சிறம்பம்சம்.
அனைத்து வகையான வாடிக்கையாளர்களையும் கவர்ந்து, விற்பனையை துரிதபடுத்திக்கொள்வது இந்நிறுவனங்களின் வியாபார யுக்தி. அந்த வகையில் தற்காலத்தில் டச் ஸ்கிரீன் மொபைல்களையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து, நடுத்தர மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தகுந்தாற்போன்று குறைந்த விலை டச்ஸ்கிரீன் மொபைல்களை வெளியிட்டுள்ளது இந்நிறுவனங்கள்.
டச் ஸ்கிரீன் மொபைல்களில் 3G உட்பட ஜிபிஎஸ் போன்ற கனக்ட்டிவிட்டி வசதிகளும் உள்ளதால் அனைவருமே டச் ஸ்கிரீன் மொபைல்களையே விரும்புகிறார்கள்.