--> Skip to main content

குறைந்த விலை டச்-ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்கள்..!

குறைந்த விலை டச் ஸ்கிரீன் போன்கள்...

சாம்சங், நோக்கியா,சோனி, எல்ஜி போன்ற சிறந்த நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி வருபைவை ஆண்ட்ராய்ட் வகை டச் ஸ்கிரீன் மொபைல்கள். இமயமலை உயரத்திற்கு அதிக விலைகொண்ட போன்களும், அதளபாதாளம் வரையுள்ள மிக குறைந்த விலையுள்ள போன்களையும் வெளியிடுவதுதான் இத்தகைய நிறுவனங்களின் சிறம்பம்சம். 

lava-iris-smartphone-at-rs-4199
லாவா ஐரிஸ் ஸ்மார்ட் போன்
அனைத்து வகையான வாடிக்கையாளர்களையும் கவர்ந்து, விற்பனையை துரிதபடுத்திக்கொள்வது இந்நிறுவனங்களின் வியாபார யுக்தி. அந்த வகையில் தற்காலத்தில் டச் ஸ்கிரீன் மொபைல்களையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து, நடுத்தர மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தகுந்தாற்போன்று குறைந்த விலை டச்ஸ்கிரீன் மொபைல்களை வெளியிட்டுள்ளது இந்நிறுவனங்கள்.

டச் ஸ்கிரீன் மொபைல்களில் 3G உட்பட ஜிபிஎஸ் போன்ற கனக்ட்டிவிட்டி வசதிகளும் உள்ளதால் அனைவருமே டச் ஸ்கிரீன் மொபைல்களையே விரும்புகிறார்கள். 

என்னென்ன டச் ஸ்கீரீன் போன்கள் உள்ளன. அவற்றை எந்தெந்த நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன என்பதை கீழே பார்ப்போம். 


1. வீடியோகான் A22

இது 3.5 இன்ச் டச் ஸ்கிரீன் உடையது. ஆண்ட்ராய்ட் 2.3.7 இயங்குதளத்தில் இயங்க கூடியது. இதில் 1GHZ Processor உள்ளது. 0.3 மெகா பிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. அது மட்டுமல்லாமல் Wi-Fi, 16 GB expandable memory, 3 G ஆதரவு, AGPS, 1500 mAh பேட்டரி ஆகியவைகளைக் கொண்டுள்ளது. 

இதன் விலை ரூபாய் 3999 மட்டுமே. 


2. ஸ்பைஸ் ஸ்டெல்லார் எக்டசி Mi 352

இந்த ஸ்மார்ட் போனில் 3.5 இன்ச் டச் ஸ்கீரினும், 1GHz பிராச்சரும், 3 மெகா பிக்சல் கேமராவும் உள்ளன. அதுமட்டுமல்லால் 16 GB க்கு மெமரியை அதிகபடுத்தும் SD card, 3G, AGPS, 1300 mAh பேட்டரி ஆகியவையும் பெற்றுள்ளன.

இதன் விலை ரூபாய் 4999 மட்டுமே. 

3. லாவா ஐரிஸ் 356

இந்த ஆண்ட்ராய்ட் 3.5 இன்ஞ் டச் ஸ்கிரீன் , 1.2 GHz பிராசசர், 1.3 மெகாபிக்சல் கேமரா, Wi-Fi, 3G சப்போர்ட், AGPS, 1500 mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது. 

இதன் விலை ரூபாய் 4199 மட்டுமே. 

4. ஐபால் ஆன்டி 3.5i

இந்த ஆண்ட்ராய்ட் போனில் 3.5 இன்ஞ் டச் ஸ்கிரீனும், 3.2 மெகா பிக்சல் கேமராவும், Wi-Fi 32 GB மெமரியை விரிவாக்கத்தக்க வகையான வசதியும் ( SDcard) உள்ளன. 

இதன் விலை ரூபாய் 3110 மட்டுமே.

5. மைக்ரோமேக்ஸ் நின்ஜா 3.5 A54

3.5 இன்ஞ் டச் ஸ்கிரீனும், 1GHz பிராசசரும், Wi-Fi , 32 GB மெமரியை விரிவாக்கம் செய்யும் வசதி, 3G ஆதரவு என வசதிகளுடன் 1300 mAh பேட்டரி பேட்டரியும் உள்ளன. 

இதன் விலை ரூபாய் 4299 மட்டுமே.


6. ஹூவாய் அசென்ட் Y210D


இந்த ஸ்மார்ட் போனில் 3.5 டச் ஸ்கிரீன், 2 மெகா பிக்சல் கேமரா, Wi-Fi, 1GHz பிராசசர், 1700mAh பேட்டரி ஆகியவையும் உள்ளன. 

இதன் விலை ரூபாய் 4699 மட்டுமே.

7. ஐடியா id 918

இந்த போனில் 3.2 இன்ச் டச் ஸ்கிரீனும், 3.2 மெகாபிக்சல் கேமராவும், Wi-Fi, டுயல் சிம், ஏஜிபிஎஸ், 1300mAh பேட்டரியும் உள்ளன. 

இதன் விலை ரூபாய் 4499 மட்டுமே. 

இந்த போன்கள் அனைத்தும் மிக பிரபலமான இந்தியன் ஆன்லைன் மொபைல் ஸ்டோர் பிளிப்கார்ட் மற்றும் சாகோலி தளங்களில் கிடைக்கின்றன. 
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar