--> Skip to main content

உடல் ஆரோக்கியத்திற்கு 5 டிப்ஸ்..!

very good habits for better lifestyle

நீரின்றி அமையாது ஆரோக்கியம்

நீரின்றி இந்த உலகமே இயங்காது என்பது நமக்குத் தெரியும். நீரில்தான் முதல் உயிரி தோன்றியது என்பதும் அறிவியல் பூர்வமான உண்மை.. எனவே நமது உடலும் நீரின்றி இயங்காது என்பதும் உண்மையிலும் உண்மை. நமது உடலில் இரத்தம் உட்பட 75 % நீர்பொருள் உள்ளது. 

very-good-habits-for-better-lifestyle


தினமும் 7 முதல் 9 லிட்டர் நீரை பருகினால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். அதிகம் உடம்பில் நீர் சேர்வதால், கழிவுநூர் வேர்வையாகவும், சிறுநீராகவும் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் கல் தங்காது. 

சிறுநீரகக் கல்லால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதனால் ஏற்படும் வலிகளை அனுபவித்தவர்களுக்கு கண்டிப்பாக குடி நீரின் அருமை தெரிந்திருக்கும். நீரின் அருமையைப் பற்றி இதற்கு முன்பே நம் வலைத்தளத்தில் இடம்பெற்றிருக்கும் "சும்மா கிர்ன்னு தண்ணி குடிங்க"  பதிவும் உங்களுக்கு உதவும்.

சாப்பிடும் முறைகள்: 

நம்முடைய உடல்நிலை பாதிக்காமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. படிப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மையும் கூட.. அதிகம் சாப்பிடமால் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவு நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) பாதிக்காமல் இருக்கும். 

ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் அல்லது இரண்டு வேளைகள் சாப்பிடுவதைக் காட்டிலும் ஐந்து அல்லது ஆறு முறை குறைந்த உணவு எடுத்துக்கொள்வது நல்லது. அவ்வாறு குறைந்த உணவில் அதிக புரதம், உயிர்ச்சத்துக்கள் உள்ள காய்கறிகள், பால், பழங்கள் , பருப்பு வகைகளை உட்கொள்ளலாம். 

இதனால் இரத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகமாவது தடுக்கபடுகிறது. இதனால் உடல்நிலையும் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். 

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தீமைகளை அலசும் "சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுபவரா நீங்கள்?- ஓர் எச்சரிக்கை குறிப்பு" என்ற இப்பதிவும் உங்களுக்கு உதவக்கூடும். 

கல்லீரல் சுத்தம்

உடலில் அதிமுக்கியமான உறுப்பு என்று சொன்னால் அது கல்லீரல்தான். கல்லீரலைச் சுத்தப்படுத்த நல்ல குடிநீரில் எலுமிச்சை சாற்றைக் கலந்து கொண்டு, அதில் சிறியளவு கறிவேப்பிலையும் கசக்கி போட்டு இரண்டு குவளை நீரை குடித்தால் போதும். இந்த முறை கல்லீரலைச் சுத்தப்படுத்தி, அதன் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. 

கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பேணும் ப்பஃபாளி பழம் பற்றிய பதிவை "பப்பாளி பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள்" என்ற பதிவில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். 

சுறுசுறுப்பே ஆரோக்கியத்தின் அடிப்படை

உங்களுடைய வேலைகளை நீங்களே செய்துகொண்டாலே போதுமானது. அதாவது குளிப்பது, நடப்பது, அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து செல்வது.. இதுபோன்ற வேலைகளை நீங்கள் செய்துகொள்வதன் மூலமாகவே இயற்கையாகவே உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. கீழே விழும் பொருட்களை குனிந்து எடுப்பதும், குனிந்து வளைந்து சிறிய சிறிய வேலைகள் செய்வதும் கூட உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். 

சுறுசுறுப்பு எப்படி மனிதனின் ஞாபக சக்தியை அதிகப்படுகிறது என்பதையும், ஞாபக சக்தியை அதிகரிக்க வழிமுறைகளை அறிந்துகொள்ளவும் உங்களுக்கு "ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழிகள்" இப்பதிவு உதவும். 

8 மணி நேரத் தூக்கம்

நன்றாக தூங்கி எழுவதன் மூலம் மூளைக்குத் தேவையான ஓய்வும், புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. நன்றாக தூங்கி எழுந்த நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். தூக்கம் கெட்ட நாட்களில் அதிக மன அழுத்தம், கோபம், விரக்தி போன்ற உணர்வுகளைத் தவிர்க்க முடியாது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவை வெளிப்பட்டுவிடும். இதனால் உடலுக்கும் கேடு உண்டாகும். அதனால் முடிந்தளவு 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். 

தூக்கமின்மைக்கு என்ன காரணம்,  நல்ல தூக்கம் பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள "நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்" என்ற இப்பதிவை வாசித்துப் பயன்பெறுங்கள். 


நன்றி. 

- தங்கம்பழனி
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar