தினமும் புதிய புதிய வைரஸ்களும், மால்வேர்களும் உருவாக்கப்பட்டு இணையம் கணினிகளைத் தாக்கி, கணினிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குகிறது.
ஹேக்கர்கள் என அழைக்கப்படும் இணைய வழி நுட்ப திருடர்களின் வேலை இது. ஏதாவது ஒரு இணைப்பின் (Link) மூலமாகவோ அல்லது தரவிறக்கம் மேற்கொள்ளும்பொழுது (Download) அதனுடன் இணைந்து இந்த தீங்கிழைக்கும் மென்பொருளும் கணினியில் நுழைந்துவிடுகிறது.
இது நம்முடைய கண்ணுக்குத் தெரியாது. இதனை ஆண்டி வைரஸ் மென்பொருள்களின் மூலமே கண்டறிய முடியும்.
சில சமயம் இந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் தொகுப்பையும் (Anti virus sofware) மீறி சில மால்வேர்கள் கணினியில் தம்முடைய வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். இத்தகைய மால்வேர்களை கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் ஆண்டி வைரஸ் மென்பொருளால் கண்டறிந்து அழிக்க முடியாது.
அதுபோன்ற சமயங்களில் மால்வேர் தொகுப்புகளை கண்டறிந்து நீக்குவதற்காகவே மைக்ரோசாப்ட் நிறுவனம் System Sweeper என்ற மென்பொருளை வழங்குகிறது. இது முற்றிலும் இலவசமே..
இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் பதிந்திருந்தாலும் கூட பயன்படுத்த முடியும். அவ்வாறு பயன்படுத்துவதால் மால்வேர் பாதிப்பிலிருந்து உங்களுடைய கணினியை நீங்கள் பாதுகாத்திட முடியும். ஆண்டி வைரஸ் மென்பொருளுடன் மைக்ரோசாப்டின் சிஸ்டம் ஸ்வீப்பர் மென்பொருளையும் பயன்படுத்துவதால் உங்கள் கணினிக்கு கூடுதல் பாதுக்காப்பு கிடைக்கும்.
சிஸ்டம் ஸ்வீப்பர் மென்பொருளின் பயன்கள்: (Features of System sweeper)
- இது மால்வேர் மற்றும் ஸ்பைவேர் நச்சு நிரல்களுக்கு எதிராக திறமையாக செயல்பட்டு அவற்றை நீக்கிட உதவுகிறது.
- மைக்ரோசாப்டின் தயாரிப்பு என்பதால் நம்பகத்தன்மை அதிகம்.
- இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இம்மென்பொருளைப் பயன்படுத்த முடியும். எனவே இணைய இணைப்பு இல்லாத கணினியில் நிறுவியும் பயன்படுத்தலாம்.
- நேரடியாக கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது என்றாலும் Removal Device களான Pendrive, CD, DVD போன்றவைகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
- அதனால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் இதை எளிதாக எடுத்துச் செல்லலாம்..
- நீங்கள் வெளியிடங்களில் மற்ற கணினிகளைப் பயன்படுத்தும்பொழுதும் அக் கணினியை இம்மென்பொருள் மூலம் மால்வேர் உள்ளதா என சோதித்து அறிந்துகொள்ள முடியும்.
- வைரஸ் பிரச்னை காரணமாக உங்களுடைய கணினி Boot ஆகவில்லை என்றால் இம் மென்பொருளைப் பதிந்து வைத்திருக்கும் சிடியைப் பயன்படுத்தி பூட் செய்து கொள்ள முடியும் என்பது இம்மென்பொருளின் கூடுதல் பயன். அவ்வாறு கணினியை தொடங்கச் செய்யும்பொழுது, கணினி boot ஆகாமல் தடுத்த வைரஸ், மால்வேர்களை, அழித்து, கணினி பூட் செய்கிறது.
- இந்த மென்பொருள் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் (Malware and spyware attacks) தாக்குதலிருந்து கணினி பாதுகாக்க மட்டுமே அன்றி ஒரு முழுமையான ஆண்டி வைரஸ் மென்பொருள் இல்லை. அதனால் ஏற்கனவே உங்கள் கணனியில் உள்ள ஆண்டி வைரஸ் மென்பொருளை அப்படியே பயன்படுத்துங்கள்..
நன்றி.
-தங்கம்பழனி