--> Skip to main content

காதலும் பின்னே மோதலும்....!!!

காதல் என்பது பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரனத்திலும் உள்ளது. மனிதர்களிடத்தில் அது மகத்தானதாக உள்ளது. 

ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக காதலில் விழுந்திருப்பான். அதில் சந்தேகமில்லை. 

பணம், பகுத்தறிவு, சூழல் ஆகியவற்றை மையமாகக் கொண்டே இன்றைய காதல்கள் பெருமளவு வளர்ந்துகொண்டுள்ளன. 

சில விதிவிலக்கு. பார்த்ததும் காதல் வகையை சார்ந்தது இது. 

காதலிக்கப்படுபவர் ஏதேனும் ஒரு வகையில் கவர்ச்சியை உருவாக்கியதால் ஏற்பட்ட விளைவு அது. 

சரி.. காதல் பற்றி பிரச்னைகளை எப்படி சமாளிக்க வேண்டும்? 

மூன்றாமவருக்குத் தெரியமாலேயே இத்தகைய விஷயங்களை பேசி முடிக்க வேண்டும்.  சினிமா வேறு.. இயல்பு வாழ்க்கை வேறு என்பதை நாமும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.. !

ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் பருவ வயதை கடக்கும்போது எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் இவைகள். 

சில பெற்றோர்களுக்கு அதிர்டம் துணை நிற்கிறது.பிள்ளைகள் ஒழுக்கமாக வளர்கிறார்கள்.. பல பெற்றோர்களுக்கு சூழல் எதிராக அமைந்துபோகிறது.. பிள்ளைகளும் சற்றே ஒழுக்கநெறியினின்றி  விலகிவிடுகிறார்கள் (பொருந்தா காதிலில் விழுந்துவிடுகிறார்கள்).

சிலர் சாதுர்யமாக தங்கள் பிள்ளைகளின் காதலை எதிர்கொள்கிறார்கள். சிலர் மிரட்டி, உருட்டி பணிய வைக்கிறார்கள். காதல் மனநிலையில் உள்ளவர்களை இப்படி தங்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றுவது என்பது மலையை தலையால் உடைத்து சிதறச் செய்வதற்கு ஒப்பானதுதான். 

சிலருக்கு சாத்தியமாகிறது. மிகப் பலருக்கோ விபரீத விளைவுகள்தான் உண்டாகிறது. 

பிரச்னை வீட்டிற்குள் இருக்கும் வரைக்கும் யாருக்கும் தெரியாது.

வீதிக்கு வந்துவிட்டாலோ நாறி விடுகிறது...

சும்மாவா சொன்னார்கள்.. "உலை வாயை மூடலாம்.. ஊர் வாயை மூட முடியுமா..?" என்று.

பின் விளைவுகளுக்கு ஆட்படுபவர்கள் பிரச்னைக்குரியவர்களேயன்றி, ஊடகங்களோ, நீதிதுறையோ, காவல்துறையோ அல்ல... என்பதை மட்டும் ஆழமாக மனதில் இருத்திக்கொள்ளுங்கள்..!!!!

ஒவ்வொரு பிள்ளையும் நாளைய பெற்றோரே..!

நாளை உங்களுடைய குழந்தைகளுக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கலாம்...!

அதனால் காதலிப்போரே...காதல்வயப்பட்டோரே... எந்த ஒரு செயலையும் பெற்றோருக்கெதிராக செய்யகூடாது என்பதில் உறுதியாக இருங்கள்...!!!


அன்புடன் உங்கள் 
தங்கம்பழனி
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar