--> Skip to main content

ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கான காலண்டர் அப்ளிகேஷன்..!

ஆண்ட்ராய்ட் போனுக்கான புதிய காலண்டர் மற்றும் விட்ஜெட் அப்ளிகேஷன் இது. Digibites நிறுவனத்தின் Digical என்ற இந்த காலண்டர் அப்ளிகேஷன் கூகிள் காலண்டருடன் ஒருங்கிணைப்பட்டு செயல்படுகிறது. இது பரந்துவிரிந்த பல காலண்டர் காட்சிமுறைகளைக் கொடுக்கிறது அதாவது Agenda, day, week, month, text month, list) போன்ற பட்டியல்கள் முறையில் காலண்டரை காட்சிப்படுத்தக்கூடிய வசதியை அளிக்கிறது.

Digical calendar and widgets for all type of android devices


இந்த அப்ளிகேஷனானது, உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனம் எந்தொரு வகையினதாக இருப்பினும் அதற்கேற்ற வகையில் தானாவே மாற்றிக்கொண்டு, சாதனத்துக்கேற்ற வகையில் செயல்படும் தன்மை வாய்ந்தது.

டிஜிகால் அப்ளிகேஷனானது பல பயன்மிக்க விட்ஜெட்களை கொண்டுள்ளது. location search, traver and traffic time போன்ற வசதிகளானது, நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு சென்று சேர பயன்படுகிறது. இது முற்றிலும் இலவசமான அப்ளிகேஷன். 4.95 டாலர் பெறுமான கட்டண டிஜிகால் காலண்டர் அப்ளிகேஷனில் மேலதிக வசதிகளைப் பெற முடியும்.

இந்த அப்ளிகேஷனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: Download and Install Digical Android apps
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar