வணக்கம் நண்பர்களே...!
ஒவ்வொருவரும் "ஆண்ட்ராய்ட்" வகை போன்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் காலம் இது. இதுபோன்ற தகவல்தொழிலநுட்ப சாதனங்களில் லேட்டஸ்ட் வசதிகளில் ஒன்று டச் ஸ்கிரீன்.
கணினி, டேப்ளட், மடிக்கணினி, அலைபேசி (computer, laptop, tablet pc, phones)இப்படி அனைத்திலுமே டச் ஸ்கீரின் எனப்படும் தொடுதிரையே பயன்பாட்டில் உள்ளது. மிகவும் மிருவானதும், நுட்பத்திறன் வாய்ந்த்துமான தொடுதிரையை சுத்தம் செய்யும் வழிமுறைகள் காண்போம்.
- முதலில் உங்களுடைய தொடுதிரை சாதனத்தை ஸ்விட் ஆப் செய்யுங்கள்.
- அடுத்து மிருதுவான மெல்லிய மைக்ரோபைபர் (microfiber cloth) துணியை எடுத்துக்கொள்ளுங்கள்.
- அத்துணியைப் பயன்படுத்தி தொடுதிரையின் நடுப்பகுதியில் ஆரம்பித்து ஒரு டிஸ்க் வடிவத்தில் வட்டி வடிவமாக துடைத்தெடுக்கவும். வட்ட வடிவமாக துடைப்பதால் கீரல் விழுவதை தடுக்க முடியும்.
- பிறகு தொடுதிரையை துடைக்கப் பயன்படுத்திய துணியின் பகுதியை தவிர்த்து, மற்ற பகுதியின் ஒரு நுனியில் பைபர் துணியை ஸ்கிரீன் கிளீனர் எனப்படும் திரவத்தில் நனைத்து தொடுதிரையை சுத்தப்படுத்துங்கள்.
- "ஸ்கிரீன் கிளீனர் லிக்வட்"(screen cleaner liquid)டைப் பயன்படுத்துவதன் மூலம் தொடுதிரையில் உள்ள அழுக்குகள் நீங்கள் "பளிச்" சென காட்சியளிக்கும்.
- தொடுதிரையை சுத்தம் செய்ய மற்ற வகை துணிகளையோ,வெறும் கைகளையோ பயன்படுத்த கூடாது. இதனால் தொடுதிரையில் கீரல் ஏற்படுவதோடு தொடுதிரையில் தேய்மானம் ஏற்பட்டு, மங்கலான தோற்றத்தைப் பெற்றுவிடும்.
விலையுயர்ந்த சாதனங்களை வாங்கிவிட்டு, அதைப் பரமரிக்க சரியான முறைகளைப் பயன்படுத்த தயங்க கூடாது. அதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவே. இம்முறையைப் பயன்படுத்தும்பொழுது மீண்டும் புத்தும் புதிய சாதனம்போன்று உங்களுடைய தொடுதிரைய சாதனங்கள் தோற்றமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி.
தங்கம்பழனி