(புதிய பதிவர்களுக்கான பதிவு இது)
தமிழ் வலைப்பதிவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறார்கள் என்பது மகிழ்ச்சித் தரக்கூடிய விடயம். ஆனால் ஒரு சிறந்த வலைப்பதிவை எப்படித் தொடங்க வேண்டும் என்பது புதியவர்களுக்கு தெரிவதில்லை.. அல்லது ஏதோ ஒன்றை எழுதிவிட்டு, வருகையாளர்கள், கருத்துரைக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைகிறார்கள்.
ஒரு சிறந்த வலைப்பூவை தொடங்கி எப்படி வெற்றிகரமான முதல் பதிவை ஆரம்பிப்பது?
புதியதாக வலைப்பதிவு எழுத முனையும் நண்பர்களே..! இது உங்களுக்காகத்தான்..உங்களுடைய முதல் பதிவு உங்களைப் பற்றிய அறிமுகப்பதிவாக இருக்கட்டும். அப்பதிவில்..
- உங்களைப் பற்றிய விபரங்கள்
- நீங்கள் வலைப்பூ ஆரம்பித்ததன் காரணம்
- வலைப்பூவின் நோக்கம்
- வலைப்பூவில் என்னென்ன தகவல்களை எழுதி பகிரப் போகிறீர்கள் என்பன போன்றவை இருக்க வேண்டும்.
- எளிய நடையில், நீங்கள் பகிரும் தகவல்கள் அனைத்தையும் உண்மையாக இருக்க வேண்டும்.
- இயல்பான நடையில் எழுதினாலே போதும்... மிக எளிதாக உங்களை அது அடையாளப்படுத்தி காட்டும்.
- உங்களுடைய வலைப்பூவில் நீங்கள் பகிரும் தகவல்கள் படிப்பதற்கும் சுவையாகவும், சுவராஷ்யமாகவும் இருக்கட்டும்.
- பயனுள்ள தகவல்களாக இருப்பின் ஏராளமான நண்பர்களைப் பெறலாம்.
- கவிதை கட்டுரை என இலக்கிய ரீதியாக எழுத முனைபவர்களுக்கும் ஒரு ரசிகர் கூட்டமே இணையத்தில் உண்டு.
சாதாரணமாக உங்களுடைய அனுபவங்களையே அழகாக எழுதி பகிரலாம். சின்ன சின்ன விடயமாக இருந்தாலும் கருத்து சிதையாமல் சொல்ல வந்ததை தெளிவாக எழுதினால் நிச்சயம் நீங்களும் பிரபல பதிவர்தான்..
என்ன நண்பர்களே..! இனியும் காத்திருக்க வேண்டுமா என்ன?
உங்களுக்கான வலைப்பதிவை உடனே உருவாக்குங்கள்...!!! உங்களுடைய எண்ணங்களை வலைபூவின் மூலம் உலகத் தமிழர்களுக்குப் பகிருங்கள்..!
வலைப்பூ தொடங்குவதற்கு Blogger.com, wordpress.com ஆகிய முன்னணி தளங்கள் உங்களுக்காகவே இலவச வசதிகளை வழங்குகின்றன.
மேலதிக தகவல்கள் தேவைப்படின் நீங்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம்.
நன்றி.
-தங்கம்பழனி