Barcode - some useful information
நம்மில் பலர் பார்கோட் (Barcode) என்றால் என்ன? தெரிந்து வைத்திருப்போம். ஒரு சிலருக்கு பார்கோட் என்றால் பொருட்களில் ஒட்டப்பட்டிருக்கும் கோடு போட்ட ஸ்டிக்கர் (barcode sticker) என்ற அளவில் மட்டுமே தெரியும்.
உண்மையிலேயே பார் கோட் என்றால் என்ன? அதன் பயன் என்ன? அதனை உருவாக்கியவர் யார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பார்கோட் என்றால் என்ன?
what is Barcode?
பார்கோட் என்பது பொருட்களைப் பற்றிய தகவல்களை அறிய பயன்படுத்தும் கணினி குறியீட்டை உள்ளடக்கிய டிஜிட்டல் குறியீட்டு (Digital coding) முறையாகும். இதில் உள்ள கோடுகள், இணைக்கோடுகள், இவற்றிக்கிடையேயுள்ள இடைவெளிகள் ஆகியவற்றின் மூலம் பொருட்களைப் பற்றியத் தகவல்களை அறியும்படி உருவாக்கப் படுகிறது. பார்கோடுகள் 1D, 2D முறையில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பார்கோடில் உள்ள தகவல்களை படித்தறிய உதவும் பொறியியற் கருவிக்கு பார்கோட் ஸ்கேனர் (Bar-code Scanner) என்று பெயர்.
பார்கோட்டை உருவாக்கியவர்கள்: (inventor of Bar Code )
நோர்மன் ஜோசப் வூட்லான்ட் அவருடைய நண்பர் பேர்னாட் சில்வர் உதவியுடன் 1940 ஆம் ஆண்டு பார்கோட் முறையை கண்டுபிடித்தார்.
இந்த முறையானது உலகளவில் வணிக வளாகங்கள், வர்த்தக நிலையங்களில் விற்கப்படும் பொருட்களின் விலை மற்றும் பொருட்கள் தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள பயன்படுத்தபட்டு வருகின்றது.
பார்கோட் முறையை உருவாக்கியவர் -நேர்மன் ஜோசப் வூட்லான்ட் |
தற்காலத்தில் வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் வியாபார துறையில் பார்கோட் முறையானது மிகப்பெரிய பயனுள்ள விடயமாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்தளவிற்கு பார்கோட்டின் பங்களிப்பு வர்த்தகத்தில் அதிகரித்துள்ளது.
தற்பொழுது பார்கோட் மூலம் நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டின் தயாரிப்பு என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.
ஒவ்வொரு நாட்டிற்கான பார்கோடும் , நாட்டின் பெயரையும் ஒரு பட்டியலிடப்பட்டுள்ளது.
நீங்கள் வாங்கும் பொருட்களில் உள்ள பார்கோட் பட்டையில் உள்ள முதல் மூன்று எழுத்துக்களை வைத்து, அப்பொருள் எந்த நாட்டின் தயாரிப்பு என்பதை கண்டறிய முடியும்.
உதாரணமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களில் உள்ள பார்கோட் 890 எனத் தொடங்கும். இதுபோன்று ஒவ்வொரு நாட்டிற்கான குறியீட்டை தெரிந்து வைத்துக்கொள்வதன் மூலம் அது எந்நாட்டின் தயாரிப்பு என்பதை கண்டறியலாம்.
உதாரணமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களில் உள்ள பார்கோட் 890 எனத் தொடங்கும். இதுபோன்று ஒவ்வொரு நாட்டிற்கான குறியீட்டை தெரிந்து வைத்துக்கொள்வதன் மூலம் அது எந்நாட்டின் தயாரிப்பு என்பதை கண்டறியலாம்.
Barcode | Countries |
00-13 | USA & Canada |
20-29 | In-Store Functions |
30-37 | France |
40-44 | Germany |
45 | Japan (also 49) |
46 | Russian Federation |
471 | Taiwan |
474 | Estonia |
475 | Latvia. |
477 | Lithuania |
479 | Sri Lanka |
480 | Philippines |
482 | Ukraine |
484 | Moldova |
485 | Armenia |
486 | Georgia |
487 | Kazakhstan |
489 | Hong Kong |
49 | Japan (JAN-13) |
50 | United Kingdom |
520 | Greece |
528 | Lebanon |
529 | Cyprus |
531 | Macedonia |
535 | Malta |
539 | Ireland |
54 | Belgium & Luxembourg |
560 | Portugal |
569 | Iceland |
57 | Denmark |
590 | Poland |
594 | Romania |
599 | Hungary |
600 & 601 | South Africa |
609 | Mauritius |
611 | Morocco |
613 | Algeria |
619 | Tunisia |
622 | Egypt |
625 | Jordan |
626 | Iran |
64 | Finland |
690-692 | China |
70 | Norway |
729 | Israel |
73 | Sweden |
740 | Guatemala |
741 | El Salvador |
742 | Honduras |
743 | Nicaragua |
744 | Costa Rica |
746 | Dominican Republic |
750 | Mexico |
759 | Venezuela |
76 | Switzerland |
770 | Colombia |
773 | Uruguay |
775 | Peru |
777 | Bolivia |
779 | Argentina |
780 | Chile |
784 | Paraguay |
785 | Peru |
786 | Ecuador |
789 | Brazil |
80 - 83 | Italy |
84 | Spain |
850 | Cuba |
858 | Slovakia |
859 | Czech Republic |
860 | Yugoslavia |
869 | Turkey |
87 | Netherlands |
880 | South Korea |
885 | Thailand |
888 | Singapore |
890 | India |
893 | Vietnam |
899 | Indonesia |
90 & 91 | Austria |
93 | Australia |
94 | New Zealand |
955 | Malaysia |
977 | International Standard Serial Number for Periodicals (ISSN) |
978 | International Standard Book Numbering (ISBN) |
979 | International Standard Music Number (ISMN) |
980 | Refund receipts |
981 & 982 | Common Currency Coupons |
99 | Coupons |
தற்பொழுது ஆன்லைன் மூலமும் பார்கோட் உருவாக்க முடியும். உதாரணமாக கூகிள் தளத்தில் online barcode என தட்டச்சிட்டு பெறும் முடிவுகளில் கிடைக்கும் தளங்களைப் பயன்படுத்தி உங்களுடைய தகவல்களுக்கான பார்கோட்டினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
உதாரணமாக இந்த Barcode Generator Online தளத்தின் மூலம் மிக எளிதாக உங்களுடைய பார்கோட்டை உருவாக்க முடியும்.
பார்கோட் உருவாக்குவதற்கான இலவச மென்பொருள்களும் உண்டு. கூகிள் தேடுதளத்தில் barcode generator software for free எனத் தேடினால் பார்கோட் உருவாக்கப் பயன்படும் மென்பொருள் தரவிறக்குவதற்கான சுட்டிகள் கிடைக்கும்.
பார்கோட் பற்றிய மேலதிக முழுமையான தகவல்களைப் பெற நீங்கள் தமிழ் விக்கிபீடியா தளத்தினை அணுகலாம்.
நன்றி.
- தங்கம்பழனி