சாம்சங் க்கு செக் வைக்கும் மைக்ரோமேக்ஸ்..
பிரபல எலக்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தற்பொழுது மொபைல் மற்றும் டேப்ளட் பிசி தயாரிப்புகளில் கலக்கி வருகிறது. தனது தயாரிப்புகளை சந்தை படுத்துவதிலும், புதிய வசதிகளுடன் கூடிய தயாரிப்புகளை வெளியிடுவதில் சாம்சங் நிறுவனத்திற்கு நிகர் சாம்சங்தான்.
அவ்வளவு பெரிய நிறுவனத்துடன் தற்பொழுது போட்டோபோட்டி நடத்தி, தனது தயாரிப்பின் மூலம் நானும் சளைத்தவன் அல்ல பார்.. என்று தன்னுடைய புதிய தயாரிப்பை வெளியிட்டு சாம்சங்கிற்கு செக் வைத்திருக்கிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.
Micromax A115 canvas 3D Smartphone -ன் சிறப்பு அம்சங்கள்:
- Micromax A115 canvas 3D Smartphone ஆனது இந்தியர்களால் தயாரிக்கப்பட்டது
- ஆண்ட்ராய்ட் 4.1.2 ஜெல்லி பீன் (Android 4.1.2 Jelly bean) இயங்குதளத்தில் இயங்க கூடியது.
- ஐந்து இன்ச் அகலம் 400x400 ரெசல்யூசன் கொண்ட திரையை கொண்டுள்ளது.
- 1GB RAM, 4 GB internal storage கொண்டது.
- 2,000 mAh Battery
- ஆட்டோ போகசுடன் (Auto Focus) கூடிய 5 Mega Pixel Rear Camera
- வீடியோ சாட்டிங்கிற்கு ஏதுவான GA fron camera.
- WiFi, Bluetooth 4.0 ஆகியவற்றுடன் மேலும் பல சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது Micromax A115 canvas 3D Smart Phone .
நன்றி.
-தங்கம்பழனி