--> Skip to main content

"மெமரி கார்ட்" இந்த வார்த்தையை உபயோகிக்காத செல்போன் பயனர்களே இருக்க முடியாது. வீடியோக்களை பதிந்து வைத்துக்கொள்ள,பாடல்களை சேமிக்க, படங்களை சேமிக்க, பேசியதை சேமித்து வைக்க... இப்படி பல வகைகளில் நமக்கு உதவுகிறது மெமரிகார்ட். 

முதலில் செல்போனில் பயன்படுதப்பட்ட மெமரிகார்ட், இப்பொழுது அனைத்து விதமான தகவல் தொடர்பு சாதனங்களிலும் பயனபடுத்தப்பட்டு வருகிறது. 

குறிப்பாக டேப்டாப், டேப்ளட் பசி, ஸ்மார்ட் போன், ipad, ipod, Digital Camera போன்ற கையடக்கச் சாதனங்களைச் சொல்லாம். காலத்திற்கு ஏற்ப, பயன்படுத்துவதற்கு ஏற்ப மெமரிகார்ட்களிலும் பல்வேறு வகையான கொள்ளவு, திறன், அளவு ஆகிய வகைகளில் நமக்கு கிடைக்கிறது. 

காலத்திற்கேற்ப இதனுடைய தன்மையிலும், வகைகளிலும் மாறுபடிகிறது. ஆங்கிலத்தில் microSD card என்று சொல்லப்படும் இந்த மெமரிகார்ட்களை உலகளில் பார்க்கும்போது 400க்கும் அதிகமான நிறுவனங்கள் தயாரித்து வெளியிடுகின்றன. 

எட்டாயிரத்திற்கும் மேலான மாடல்கள் இதில் உள்ளன. குறிப்பாக இதை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். 
1. SDSC (Standard Capacity)
2. SDXC (The extended Capacity)
3. SDHC (The High Capacity)
4. SDIO

SD CARD என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதிகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க எலக்ட்ரிக் சர்யூட் முறைகளே இதில் பயன்படுத்தபட்டுள்ளன. 

SDHC கார்ட்களைவிட SD, SDXC வகை கார்ட்கள் அதிக கெப்பாசிட்டி திறன் கொண்டது. 
பொதுவா SD cards மூன்று வகையான அளவுகளில் கிடைக்கின்றன. இவைகள் ஸ்டான்டர்ட் ஆகும் . அவை.  

1. Standared SD (இதன் அளவு 32x24 மில்லிமீட்டர்)
2. Mini SD (இதன் அளவு 20x21.5 மில்லிமீட்டர்)
3. MicroSD (இதன் அளவு 15x11 மில்லிமீட்டர்)
எஸ்.டி கார்ட்களில் கெபாசிட்டி, மற்றும் திறன் வளர்ச்சிகளை வேறுபடுத்திக்காட்ட SD, SDHC மற்றும் SDXC என குறிப்பிடுகின்றனர். 
எஸ்டி கார்டின் வேகத்தைப் பொறுத்து எடுக்கப்படும் வீடியோவின் தரமும் அமையும். காரணம் அதில் எழுதப்படும் டேட்டாக்கள் அதிகமாக கையகப்படுத்துவதால்தான். இதில் ஒரு நொடிக்கு முன்னூற்றி பன்னிரண்டு MB தகவல்கள் எழுதப்படும். அதே வேகத்தில் படிக்கவும் முடியும். இந்த வேகத்தில் தகவல்கள் எழுத முடிவதால் தெளிவான படங்கள், வீடியோக்கள் மற்றும் டேட்டாக்களை நாம் பெற முடியும். 

அனைத்து SD கார்ட்களிலும் CPRM என்ற தொழில்நுட்பம் பயன்படுப்படுகிறது. CPRM என்பதின் விரிவு Content Protection for Rஊcordable Media என்பதாகும். 

SD கார்டின் சிறப்பு; 

இதன் மிகச்சிறந்த பயன்பாடே, பத்தாயிரத்துக்கும் அதிகமான முறை தகவல்களை அழித்து, மீண்டும் எழுத முடியும் என்பதுதான். ஒவ்வொரு முறையில் தேவையில்லாத அல்லது பழைய டேட்டாவினை அழித்து புதிய டேட்டாவினை பதிந்துகொள்ள முடியும். இது செயல்கள் அனைத்தும் நல்ல தரமான பிராண்டட் SD கார்ட்களில் மட்டுமே செய்ய முடியும். 

பிராண்டட SDcards ஒருசிலவற்றைப் பார்ப்போம். 

Sasmung microSD card
Sandisk Ultra microSD card
Transcend microSD card
Sandisk mobile ultra
இதுபோல 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் microSD Card கள் உள்ளன. 

 








useful informativie tips about memory card. 

Memory card is usefull for all Digital device users. it is use in smartphone, tablet pc, laptop, ipad, ipod ect..It is used for store datas, image, videos, photos and more. memory cards are producted above 400 branded name in all around the world. 

Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar