--> Skip to main content

மொபைல் வைத்திருக்கும் அனைவருக்கும் "பேஸ்புக்" - புதிய அப்ளிகேஷன்..!

பேஸ்புக் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு பேஸ்புக்கின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நண்பர்களைத் தொடர்புகொள்ள பயன்படும் எனத் தொடங்கிய பேஸ்புக் இன்று உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றிகண்டுள்ளது. 

அதன்  மற்றுமொரு புதிய மைல்கல்லாக புதிய அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அப்ளிகேஷனின் பெயர் Facebook for Every Phone என்பதாகும். இந்த அப்ளிகேஷனானது ஒவ்வொரு மொபைல் பயனரையும் பேஸ்புக் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Face-book-introduced-new-apps-facebook-for-every-phone


ஒவ்வொரு ஆண்டும் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டிருக்கும் பேஸ்புக் மேலும் பல புதிய யுக்திகளைக் கையாண்டு தனது வாடிக்கையாளர்களைக் கவர்வதில் முதன்மையாக திகழ்கிறது. 

ஒவ்வொரு மாதமும் மொபைல் போன்கள் மூலமாக மட்டும் 85 கோடியே 35 லட்சம் பேர் பேஸ்புக்கைப் பயன்படுத்திகின்றனர். 

தற்போதைய கணக்கின்படி கணினி மற்றும் மொபைல் போன்ற டிஜிட்டல் சாதனங்களின் வழியாக பேஸ்புக்கை அணுகும் பயனாளர்களின் எண்ணிக்கை மட்டும் 130 கோடிக்கு மேல் என அந்நிறுவனத் தகவல் தெரிவிக்கிறது. 
எந்த மொபைலாக இருப்பின் பேஸ்புக் பயன்படுத்தலாம்.

தற்காலத்தில் அதிக பயனாளர்கள் விரும்பு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் முதற்கொண்டு சாதாரண மொபைல்கள் வரை எந்த ஒரு மொபைலைப் பயன்படுத்தினாலும் அந்த சாதனங்களின் வழியாக பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை பேஸ்புக் எடுத்துவருகிறது. 

அதன்விளைவாக இப்புதிய Facebook for every Phone என்ற இப்புதிய அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம். 

ஒவ்வொரு புதிய மொபைலிலும்இப்புதிய அப்ளிகேஷன் பதிந்து தரப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் Messenger, New, Photos ஆகியவைகளை அனுப்ப நண்பர்களுக்கு அனுப்ப முடியும். பேஸ்புக் மூலம் இத்தகைய செயல்களை எளிதாக செய்ய முடிவதால் பயனர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் எளிதாக தொடர்புகொள்ள முடிகிறது. 

இதனால் அவர்களுக்கு செலவும் குறைகிறது. இதனால் தொடரந்து நண்பர்களுடன் இணைப்பில் இருக்க முடிகிறது. 

இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற வளர்ந்து நாடுகளில் உள்ள நடுத்தர மக்கள் பயன்படும் சாதாரண மொபைல்களிலும் பேஸ்புக் அணுக முடிகிறது. 

இணைய இணைப்பு பயன்படுத்தக்கூடிய குறைந்த விலை போன்களிலேயே இந்த அப்ளிகேஷன் இயங்குவதால் அனைவராலும் பேஸ்புக்கை பயன்படுத்த முடிகிறது.
இப்புதிய  Facebook for Every Phone  அப்ளிகேஷனை இஸ்ரேல் நாட்டில் இயங்கும் மொபைல் சேவை நிறுவனம் Snaptu வடிவமைத்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக், அனைத்து அப்ளிகேஷனை தனது வாடிக்கையாளருக்கு கொடுத்து வருகிறது. 
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar