கடந்த சில வருடங்களைத் திரும்பி பார்.. இதுவரைக்கும் நீ சாதித்தது என்ன என்பது புரியும்.
ஒவ்வொரு முறையும் யாராவது வெற்றிப்பெறும்போது மட்டும், "அடாடா.. அவன்(ள்) மட்டும் வெற்றி பெற்றுவிட்டானே.. !" என்றும், நாம் மட்டும் எப்படி தோல்வியடைந்தோம் என்று நினைத்துப் பார்த்திருப்பாய்.. தகுதியே இல்லாத ஒருவன் வெற்றிப் பெற்றுவிட்டானே.. நாம் மட்டும் எப்படி அதை தவறவிட்டோம்... என்ற ஒரு நினைப்பும் கூட எழுந்திருக்கும்..
எப்படியும் அடுத்த போட்டியில் வெற்றிப் பெற்றே தீர வேண்டும் என்ற ஒரு அசுர வேகம் மனதில் தோன்றும்..
உடனே வெற்றிப் பெற என்னென்ன தேவையோ.. என்னென்ன செய்ய வேண்டுமோ.. அதையெல்லாம் எண்ணிப் பார்ப்பாய்.. அந்த வேகமும் வெறியும்... அந்த இடத்திலேயே அப்போதே ஒரு போட்டி வைத்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுமளவிற்கு உறுதியான எண்ணம் தோன்றும்.. ஆனால்.. ஆனால்..
எல்லாமே ஒரு சில நாளைக்குத்தான். ஒரு சில வாரங்கள்தான்.. மீண்டும்.. பழைய பல்லவிதான்.
எப்பொழுதும் போலவே.. எல்லோரையும் போலவே.. வழக்கமான நிலைக்கு திரும்பிவிடுவாய்...
மீண்டும் யாராவது வெற்றி பெறும் வரை அந்த நினைவே வராது...
காரணம் உனக்கு நீயே சொல்லிக்கொள்ளும் சமாதானம்.. ஆறுதல்...
"எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை..."
"அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்.. "
"நானும் கஷ்டப்பட்டுத்தான் படிச்சேன்.. ஆனால் பாஸ் பண்ண முடியல.."
"நான் எவ்வளவோ முயற்சி பண்ணி ஓடினேன்.. ஆனால் கடைசி நிமிஷத்துல அவன் என்னை முந்திட்டான்..."
இப்படி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சொல்லியே மனதை ஆறுதல் படுத்திவிடுவாய்...
அடுத்தவர் வெற்றிப் பெறும்போது மட்டும், அந்த சூழலில் மட்டும் எழும் ஒரு வேகமானது சாதிக்கப் போதுமானது அல்ல.. அதை சோடாபாட்டில் உற்சாகம் என்பார்கள்.. சோடா பாட்டிலை திறந்தவுடன் பொங்கி வழிகிறதே.. அதைப் போல...
பாதிப்புக்கு உள்ளாகும்போது எழும் ஒரு வேகம்தான் அது.. அவ்வளவுதான்... அடுத்த நொடியோ அது மறைந்துவிடும்.
சாதிக்க இது போதாது..
சாதிக்க இது போதாது..
சாதிக்க இது போதவே போதாது...!!!!
சாதிக்க என்ன செய்யணும்? அடுத்த பதிவு வரைக்கும் காத்திருங்க.. ப்ளீஸ்..!!!
(பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகள் படிக்க எளிமையாக இருப்பதற்காகவே அப்படியே பயன்படுத்தியிருக்கிறேன்.. )
-தங்கம்பழனி
தொடரும்..