கடந்த பதிவில் 'சாதிக்க என்ன செய்யணும்' என்று முடித்திருந்தேன்.
முதலில் வெற்றிபெற்றால் 'சாதனை' செய்ய முடியும். வெற்றியென்றால் சாதாரண வெற்றியல்ல.. முன்பு வெற்றிப் பெற்றவர்களை விட சிறப்பாக வெற்றிபெறுவது சாதனை.
வெற்றி உடனே வந்துவிடுமா?
நினைத்தவுடன் வெற்றி நம்மை வந்தடைவதற்கு 'வெற்றி' என்பது நம்முடைய நிழல் அல்ல.. எப்பொழுது கூடவே வருவதற்கு. அதற்கு சூழலை முதலில் புரிந்துகொள்ள பழக வேண்டும்.
சூழலுக்குத் தகுந்தாற் போல நம்மை மாற்றிக்கொள்ளத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது மரம் போல் இருக்க வேண்டும்.
கடும் வறட்சி காலத்தையும் சமாளிக்க அது தெரிந்திருக்கிறது. கொடுமையான குளிர்காலத்திலும் பிழைக்க அது தெரிந்து வைத்திருக்கிறது.
எதிர்கால திட்டமிடல் அதனிடம் உள்ளது.
கடுமையான வறட்சியை தாக்குப் பிடிக்க முன்கூட்டியே தனக்கு உணவைத் தயாரித்துக்கொடுக்கும் இலைகள் அவை என்று பாராமல், அவைகளையே ஒவ்வொன்றாக இழக்க அது தயாராக இருக்கிறது..
அதுபோலதான் நீங்களும் சூழலுக்குத் தகுந்தாற் போல மாறிக்கொள்ள வேண்டும்.
உங்களின் இலக்கு எதுவோ, அதை முன்னிறுத்தி, மற்றவைகளை தியாகம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.
உதிர்ந்த இலைகளை மீண்டும் மரங்கள் பெற்றுவிடுகின்றன. நீங்கள் இழப்பது ஒன்றும் பெரிதல்ல.. இழந்தவைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.
இன்று இல்லையென்றால் நாளை..
நாளை இல்லை என்றால் நாளை மறுநாள்..
இழந்தவைகள் சூழல் மாறும்பொழுது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.
அப்படி எதைதான் இழக்க வேண்டும்?
அப்படி எதைதான் இழக்க வேண்டும்?
நாளை பார்ப்போமே...!!!
- தங்கம்பழனி
தொடரும்..