விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை நண்பர்களுக்கு அனுப்ப கீழிருக்கும் "விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகள்" vinayagar chadurthi greeting cards பயன்படுத்திக்கொள்ளலாம். முழுமுதற் கடவுள் விநாயகர் என்பர். அகில உலகத்திற்கெல்லாம் முதன்மையாக விளங்குபவன் என்று பக்தர்களால் கொண்டாடப்பட்டு வரும் கடவுளில் முதன்மையானவர் விநாயகர் என்கின்ற கணபதி.
இவர் தலையில் யானை தலை எப்படி வந்தது என்பது குறித்து வரலாற்று புராணம் உண்டு.
புராணக் கதைகளில் சில நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பினும் கூட கடவுள் பக்தியால் மக்கள் அனைவரும் அதை மெச்சி ஏற்றுக்கொண்டனர்.
இப்படியும் கூட நடந்து இருக்கலாம் என்ற அதீத நம்பிக்கை காரணமாக விநாயகருக்கு யானை சிலை வைத்து வணங்கத் தொடங்கினர்.
அதன் பிறகு பூசிக வாகனன் என்று அவரை பெருமிதமாக பக்தர்கள் அழைத்து பாடி தங்களுடைய பக்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
தற்பொழுதும் கூட அவரது பிறந்த நாளை விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.