ஒரு நான்கு சக்கர வாகனத்தை இயக்க கண்டிப்பாக கைகளும், கால்களும் நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த வாகனத்தை சாலையில் செலுத்த முடியும்.
பிறப்பிலேயே போலியாவால் கால்கள் பாதிக்கப்பட்டு, தன்னம்பிக்கையோடு உழைக்கும் மாற்றுத் திறனாளிகள் அதுபோன்ற வாகனங்களை இயக்க முடியாது என்ற நிலைதான் நேற்றுவரை இருந்த்து.
இரண்டு சக்கர வாகனங்களையே சரியாக ஓட்ட முடியாமல் தவிக்கும் அவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்கள்தான் போக்குவரத்துக்கு உதவிக்கொண்டிருந்தன.
இந்த நிலையை தமது பெரும் முயற்சியால், தொழில்நுட்ப அறிவால் மாற்றிச் சாதித்துக் காட்டியிருக்கிறார் ஒரு இளைஞர்.
மாற்றுத் திறனாளியான அவர் " ஒரு மாற்றுத் திறனாளி ஒருவர் துணையில்லாமல் வேறு இடங்களுக்குச் சென்றுவருவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து" இதைச் செய்திருக்கிறார்.
இவரின் தொழில்நுட்பத்தை பிரபல கார் நிறுவனங்கள் வாங்க பேரம் பேசியதிலிருந்தே இவருடைய தொழில்நுட்பத்தின் மதிப்பு நாம் அறிந்துகொள்ள முடியும். பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகியவைகளை கைகளாலே இயக்கும் வகையில் அமைத்திருப்பதுதான் இவருடைய தொழில்நுட்பத்தின் ரகசியம்.
இத்தொழில்நுட்பத்தைப் பெற என்ன செய்வது?
இவரே தேவையானவர்களுக்கு இத்தொழில்நுட்பத்தை செய்து தருகிறார். ஆல்ட்டோ (Alto) போன்ற கார்களுக்கு உதிரி பாகங்கள் வாங்க ரூபாய் 55 ஆயிரமும், டொயொட்டோ பார்ச்சூனர் (toyota fortuner) உள்ளிட்ட கார்களுக்கு ரூபாய் 85 ஆயிரமும் செலவாகும் என தெரிவிக்கும் இவர் வேண்டிய மாற்றங்களை தானே செய்து தருவதாக கூறுகிறார்.
10000 கிலோமீட்டருக்கு ஒருமுறை சர்வீஸ் செய்தால் போதுமானது என்றும், அந்த சர்வீசையும் ரூபாய் 5000க்கு தான் வீட்டிற்கே வந்து செய்து தருவதாகும் கூறுகிறார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பம் இது. ஐஐடி நிறுவனம் இவருடைய தொழில்நுட்ப்தை அங்கீகரித்துள்ளது.
இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் பிரபல கார் கம்பெனிகள் இவரின் திறையையும், தொழில்நுட்பத்தையும் அறிந்து அணுகியுள்ளனர்.
உங்கள் நண்பர்களே உங்களுக்குத் தெரிந்த அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுபோன்ற கார் வடிவமைத்துத் தர விரும்பினால் நீங்கள் நேரடியாக இவரை அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
அலைபேசி எண்: 09940734277.
உதயகுமார் என்ற இளைஞரின் சேவையையும், அவர் கண்டுப்பிடித்த தொழில்நுட்பத்தையும் பாராட்டுவோம்.
நன்றி.
- தங்கம்பழனி.