இமேஜ் எடிட்டிங் செய்யவும், நிறைய டிசைன்கள் செய்யவும் பயன்படும் ஒரு தொழில்நுட்ப மென்பொருள் போட்டோசாப். அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ள போட்டோஷாப் மென்பொருள் உங்களுடைய கணினியில் நிறுவியிருந்தாலே போதுமானது.
நீங்களே போட்டோஷாப் கற்றுக்கொள்ள முடியும். இணையத்தில் நிறைய போட்டோஷாப் கற்றுக்கொடுக்கும் தளங்கள் உள்ளன. பெரும்பாலான ஆங்கிலத்தில்தான் தளங்கள் உள்ளது. இணையத்தில் உடனடியாக போட்டோ எடிட்டிங் செய்யப் பயன்படும் தளங்களும் உள்ளன.
எனினும் அடிப்படை விடயங்களை கற்றுக்கொள்வதன் மூலம் இணைய இணைப்பின்றியே போட்டோ எடிட்டிங் மற்றும் டிசைனிங்க வேலைகளைக் கற்றுக்கொள்ள முடியும். அதற்கு உதவுகிறது போட்டோஷாப் இன் தமிழ் (www.photoshopintamil.blogspot.com)
இத்தளத்தில் போட்டோஷாப்பில் பூ வரைய கற்றுக்கொள்ளுங்கள். என்ற பதிவு இடம்பெற்றுள்ளது. எளிமையான வீடியோ டுடோரியலும் உள்ளது.
போட்டோஷாப் கற்க விரும்புவர்களுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும்.