தவிர தகரம், இரும்பு, நெகிழி (பிளாஸ்ட்) பிளைவுட், ஃபைபர் வுட் என பல்வேறு விதங்களிலும் தற்பொழுது கதவுகள் செய்து வீட்டிற்கு பயன்படுத்துகிறோம்.
உங்களுக்கு நிறைந்த பலன்கள் கிடைக்க வேண்டுமா? அப்படியானால் ஒரே வகையான மரத்தில் கதவு செய்யுங்கள்.
இரண்டு வகையான மரங்களினால் செய்யப்படும் கதவுகளினால் நீங்கள் நடுத்தரமான பலன்கள் மட்டுமே கிடைக்கும்.
மூன்று விதமான மரங்களினால் செய்யப்படும் கதவுகளினால் தீமையே உண்டாகும்.
வீட்டில் கதவுகளின் எண்ணிக்கை பலன்களைத் தீர்மானிக்கிறது.
- ஒரே ஒரு கதவு மட்டும்தான் இருந்தால் தீமை பலன்கள் உண்டாகும்.
- இரண்டு கதவுகள் உள்ள வீட்டிற்கு நன்மை உண்டாகும்.
- மூன்று கதவுகள் விரோதம் உண்டாகும்.
- நான்கு கதவுகள் நீண்ட ஆயுளை கொடுக்கும்
- ஐந்து கதவுகள் நோய்களை உண்டாக்கும்
- ஆறு கதவுகள் குழந்தை பாக்கியத்தைக் கொடுக்கும்.
- ஏழு கதவுகள் ஆபத்து உண்டாக்கும்.
- எட்டு கதவுகள் செல்வம் அதிகரிக்கும்.
- ஒன்பது கதவுகள் இருந்தால் வியாதிகள் உருவாகும்.
- பத்து கதவுகள் இருந்தால் பொருள்கள் திருடு போகும்.
- பதினொரு கதவுகள் இருந்தால் தீயவை நடக்கும்.
- பன்னிரண்டு கதவுகள் இருந்தால் தொழில் விருத்தியடையும்
- பதிமூன்று கதவுகள் இருந்தால் குடும்பத் தலைவனின் ஆயுள் குறையும்
- பதினான்கு கதவுகள் இருந்தால் செல்வம் அதிகம் சேரும்.
- பதினைந்து கதவுகள் தீய பலன்களை ஏற்படுத்தும்.
- பதினாறு கதவுகள் இருந்தால் நல்ல பலன்கள் உருவாகிடும்.
குறிப்பு: கதவுகளின் எண்ணிக்கை என்பது வசிக்கும் வீட்டில் உள்ளதை மட்டுமே குறிக்கும். சுற்றுச்சுவரில் உள்ள கதவுகள், அவுட் ஹவுசில் உள்ள கதவுகள் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது.
கதவுகளின் வடிவம் நீண்ட செவ்வக வடிவத்தில் இருப்பது சிறப்பு. கதவுகள் உட்பக்கமாக திறக்கும்படி வைப்பது நல்ல பலனைத் தரும்.
கதவின் சட்டம் (நிலவுகால்) இரண்டு சுவர்கள் இணையும் மூலையில் வைக்க கூடாது. சிறிது தூரம் தள்ளி வைக்க வேண்டும்.
சில கதவுகளின் மாதிரி படங்கள்: