இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிதமானது. சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வரும் இவ்வேளையில் விபத்துக்களை குறைக்கும் வகையில் அருகில் வரும் வாகனங்களை சென்சார் முறையில் அறிந்தும், அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவிகளின் மூலம் தொடர்புகொண்டும் விபத்துகள் ஏற்படாமல் தானியங்கி முறையில் தடுக்கப்படுகிறது.
விபத்தை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் கொண்ட கார் |
இத்தொழில்நுட்பத்தை ஜப்பானில் பிரபல நகரான ஹிரோஷிமாவில் Mazda Atenza AVS -5 CAR மூலம் செயற்படுத்தவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
விபத்தை தடுக்கும் புதிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த காரை ஜப்பானில் உள்ள ஹீரோசிமா ஐடிஎஸ் ஆராய்ச்சி மையத்தினர் வடிவமைத்துள்ளனர்.
இத்தொழில்நுட்பமானது தற்பொழுது முதற்கட்ட சோதனையில் உள்ளதெனவும், சோதனையின் முடிவிற்குப் பிறகு விரைவில் இதுபற்றிய முழுமையான தொழில்நுட்பத் தகவல்கள் வெளிவரும் எனவும் இத்தொழில்நுட் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இடுகையில் "மொபைல் மேனியா" என்ற பதிவில் மொபைல் மோகத்தால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்துகொண்டோம். வாசிக்காதவர்கள் தொடுப்பைச் சொடுக்கி வாசிக்கவும்.