--> Skip to main content

பிளக்கர் கான்டாக்ட் பார்ம் வசதியை மேம்படுத்துவது எப்படி?

பிளாக்கர் தளத்திற்கு வருகை தரும் வாசகர்கள் வலைப்பூவின் ஆசிரியரை தொடர்புகொள்ள புதிய காண்டாக்ட் விட்ஜெட் வசதியை கொண்டு வந்தது. இதன் பிளாக்கர் தளத்தை நிர்வகிப்பரை தொடர்புகொள்ள முடியும்.

இதைப் பற்றியும் கான்டாக்ட் விட்ஜெட்டை பிளாக்கரில் கொண்டுவருவது எப்படி என்பதைப்பற்றியும்  கடந்த பதிவொன்றில் பிளாக்கரில் புதிய காண்டாக்ட் விட்ஜெட் என்ற பதிவில் தெரிந்துகொண்டோம்.

இதே விட்ஜெட் சற்று மேம்படுத்துவதன் மூலம் தொழில்நுட்பம் தளத்தில் உள்ளது போன்று ஒரு Static Page-ல் கான்டாக்ட் பார்ம் கொண்டு வர முடியும். இதனால் உங்கள் வலைப்பூவில் சைட்பாரில் இடம் குறைவதோடு, காட்சிக்கும் நன்றாக இருக்கும்.

கான்டாக்ட் பார்மை மேம்படுத்துவது எப்படி?

  • பிளாக்கரில் லாகின் செய்துகொள்ளுங்கள். 
  • உங்களுடைய வலைப்பூவில் கான்டாக்ட் விட்ஜெட்டை இணைத்துக்கொள்ளுங்கள். (காண்டாக்ட் பார்ம் இணைப்பதற்கு உங்களுக்கு இந்த பதிவு உதவும். ஏற்கனவே இணைத்தவர்கள் அடுத்த படிநிலைக்கு செல்லுங்கள். )
  • பிறகு ஒரு புதிய Page கிரியேட் செய்யுங்கள். (பேஜ் கிரியேட் செய்ய Pages==>New Page==>Blank Page என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.)
  • தலைப்பில் Contact Form என தட்டச்சிட்டுக்கொள்ளுங்கள். 
  • பிறகு கீழிள்ள கோடிங்கை காப்பி செய்து பதிவுப் பெட்டியில் உள்ளிடுங்கள்..(உள்ளிடுவதற்கு முன்பு HTML என்பதை தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா உறுதிப்படுத்துங்கள் )
  • இறுதியாக Publish செய்துவிடுங்கள்...


அடுத்து செய்ய வேண்டியவை:

உங்களுடைய டெம்ப்ளேட்டில் உள்ள கான்டாக்ட் பார்ம் நிரலை நீக்க வேண்டியதுதான். இதற்கு நீங்கள் Template கிளிக் செய்து Edit HTML கொடுக்க வேண்டும். (Edit Html கொடுப்பதற்கு முன்பாக வலது மேல் மூலையில் இருக்கும் Backup/Restore அழுத்தி உங்களுடைய வார்ப்புருவை பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்)

பிறகு Edit HTML கிளிக் செய்து Jump to Widget என்பதில் கிளிக் செய்து contact 1 விட்ஜெட்டை கிளிக் செய்யுங்கள். விட்ஜெட் நிரல்வரிகளை விரிக்க  contact 1 என்பதற்கு நேராக உள்ள அம்புக்குறியை கிளிக்செய்யுங்கள். (படத்தைப் பார்க்கவும்..)
பிறகு நிரல்கள் விரியும்.
அதில் கீழுள்ள படத்தில் உள்ளவாறு நிரல்வரிகளை தேர்வு செய்து டெலீட் செய்துவிடுங்கள்.
பிறகு செய்த மாற்றத்தை சேமித்து விடுங்கள்.

அடுத்து கான்டாக்ட் பார்மை CSS நிரல்களை கொண்டு அழகுபடுத்தலாம்.

கீழுள்ள நிரல்வரிகளை  என்ற வரிக்கு மேல் சேர்த்து Save Template என்பதை சொடுக்குங்கள்.





Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar