உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முக்கியமான தகவல்தொடர்பு வலைத்தளமாக திகழ்கிறது பேஸ்புக். இதில் பள்ளி நண்பர்கள் முதல், உடன் பணிபுரிபவர்கள், அறிமுகமில்லாத நண்பர்கள், அண்டை அயலார்கள், உறவினர்கள் என ஏதேனும் ஒரு பிணைப்பில் இருப்பவர்கள் நட்பு வைத்துக்கொள்ள முடியும்.
கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ள முடியும். கருத்துகள் மட்டுமா? நிழற்படங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், முக்கியமான டாகுமெண்ட்கள், காணொளிகள் என அனைத்தையும் நண்பர்களுக்குப் பகிர முடியும்.
நண்பர்கள் பகிர்ந்த்தை நம்முடன் தொடர்பிலிருக்கும் மற்ற நண்பர்களுக்கும் Share செய்ய முடியும். பகிரப்பட்ட விடயங்கள் பிடித்திருக்கிறது என்பதை காட்ட "Like" செய்ய முடியும்.
யார் யாருக்கு வேண்டுமானாலும் நட்பு வேண்டுகோள் அனுப்ப முடியும். அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக அவர்களுடைய நண்பர்களின் பட்டியலில் இணைந்துவிடுவோம்.
அவ்வாறு இணைந்த பிறகு அவர்கள் பகிரும் செய்திகள், படங்கள், கருத்துகள், காணொளிகள் நம்முடைய பேஸ்புக் பக்கத்திலும் தெரியும்.
இவ்வாறு அறிமுகமில்லாத நண்பர்களிடம் வேண்டுகோளை ஏற்பதால் சில தர்மசங்கடங்களை சந்திக்க நேரிடும். அவர்கள் ஆபாச படங்களையோ, ஆபாசமான தகவல்களையோ பகிரும்போது நமக்கும் அவைகள் வந்துவிடும்.
இதுபோன்ற நண்பர்களை தேவையில்லை என நீங்கள் நினைத்தால் நீங்களே நீக்கிக்கொள்ள முடியும். அதற்கு முதலில் அவருடைய டைம்லைனில் சென்று, அங்கு Time Line மேலுள்ள Friends என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
தோன்றும் மெனுவில் Unfriend என்பதில் கிளிக் செய்தால் போதுமானது.
இப்பொழுது நீங்கள் நீக்க விரும்பிய நண்பருடைய "நண்பர்கள் பட்டியலில்" இருந்து உங்களுடைய பெயர் நீக்கபட்டுவிடும்.