நீங்கள் கணினிக்கு புதியவரா? உங்கள் கணினியில் ஏதேனும் பிழை ஏற்பட்டு பிழைச் செய்தி தோன்றியிருக்கும்.. ஆனால் அவற்றை என்னவென்று உங்களால் கூற முடியவில்லையா? கவலை வேண்டாம்.. அதற்கான தீர்வை தேடி கூகிள் முதலான தளங்களில் தேடியும், உங்களுக்கு குழப்பமே மிஞ்சுகிறதா?
அப்படியானால் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு மிகச்சிறந்த தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.errorhelp.com/
நீங்கள் உள்ளிடும் பிரச்னைகளுக்கான தீர்வை வழங்கும் இணையதளங்களையும் காட்டுகிறது.. இதற்கு முன்பு பயனாளர்கள் இத்தளத்தில் உள்ளிட்ட கணினி குறித்த பிழைச் செய்திகளையும், அதற்கான தீர்வை வழங்கிய விபரங்களையும் வரிசைப்படுத்திக் காட்டுகிறது.
ஏற்கனவே அங்குள்ள இத்தகைய தொகுப்பில் உங்களுடைய பிரச்னை ஒன்றாக இருந்தால் நீங்கள் அதையே தீர்வாக பயன்படுத்திக்கொள்ள முடியும். பெரும்பாலான பிரச்னைகள் அனைத்தையும் ஏற்கனவே இதில் உள்ளடக்கி உள்ளதால் இந்த பகுதியும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் தேடும் கணினி பிரச்னைக்கான தீர்வு இத்தளத்தில் இல்லையெனில் விரைந்து அதுகுறித்த தகவல்களை நாற்பத்தெட்டு மணி நேரத்தில் தேடித் தருவதாக உறுதியளிக்கின்றனர்.. 99.9 சதவிகித கணினி பிழைகளை இத்தளத்தின் மூலமாகவே கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெற்றுவிடலாம்..
இந்த தகவல்கள்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்..
நன்றி
- தங்கம்பழனி.